விஜய்-ஜோதிகா ஆகியோர் ஜோடி சேர்ந்து “குஷி”, “திருமலை” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தனர். இந்த இரண்டு திரைப்படங்களும் மிக பெரிய ஹிட் ஆனது. இத்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது “தளபதி 68” திரைப்படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் திருமணம் ஆவதற்கு முன்பு அவர் கடைசியாக நடித்த திரைப்படம் “மணிகண்டா”. இத்திரைப்படத்திற்கு பிறகு “சீதா கல்யாணம்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
வெகு காலம் கழித்து 2015 ஆம் ஆண்டு “36 வயதினிலே” திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார். அதன் பின் “மகளிர் மட்டும்”, “நாச்சியார்”, “செக்க சிவந்த வானம்”, “காற்றின் மொழி”, “ராட்சசி”, “ஜாக்பாட்”, “தம்பி”, “பொன்மகள் வந்தாள்”, “உடன்பிறப்பே” ஆகிய பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஜோதிகா தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக “காதல் தி கோர்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் “ஸ்ரீ” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “மெர்சல்” திரைப்படத்தில் நித்யா மேனன் கதாப்பாத்திரத்திற்கு முதலில் ஜோதிகாவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று அட்லீ நினைத்தாராம். இது குறித்து ஜோதிகாவை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.

இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிப்பாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





