பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இதயம் முரளி கேரக்டரில் அதர்வாவின் அப்பா நடிகர் முரளியே நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளியான சில மாதங்களில் முரளி திடீரென மறைந்து விட்டார்.
பாணா காத்தாடி படத்துக்கு பிறகு சண்டி வீரன் 100 கணிதன் பரதேசி ஈட்டி என பல படங்களில் அதர்வா நடித்திருந்தார். குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றது. ஆனால் தொடர்ந்து அதர்வாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இருக்கவில்லை.
ஆனால் தமிழ் சினிமாவில் ஒருகாலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அதர்வாவின் அப்பா முரளி. முரளி நடித்த படங்களை விரும்பி ரசிக்க ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. குறிப்பாக 1990களில் பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல வெற்றிப் படங்களில் முரளி நடித்திருந்தார்.
அவரது மகன் அதர்வா இப்போது அவரது அப்பா கேரக்டரில் நடித்த இதயம் முரளி என்கிற படம் வருகிற பிப்ரவரி மாதம் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது.ஏற்கனவே நடிகர் முரளி நடித்த இதயம் என்ற படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டைரக்ட் செய்திருக்கிறார்.
இதயம் முரளி படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மீதமுள்ள நிலையில் சென்னையில் ஏஆர் கார்டனில் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கேமியோ ரோலில் நடிக்க 3 நடிகர்களில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதில் நடிகர் தனுஷ், நடிகர் ரவி மோகன் அல்லது நடிகர் சிவகார்த்திகேயன் இவர்களில் ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் அந்த 3 பேரில் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த 3 நட்சத்திர நடிகர்களுமே மிக நெருக்கமானவர்களாக இருப்பதால் 3 பேரில் ஒருவர் விரைவில் இதயம் முரளி ஷூட்டிங்கில் பங்கேற்க வருகிறார் என்று படக்குழு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.





