தமிழ் சினிமாவில் இசைத்துறையில் சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர்கள் எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி. பல ஆயிரக்கணக்ககான பாடல்களை தனியாகவும் பாடியிருக்கின்றனர். இணைந்தும் பாடியிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் எஸ்பிபி – எஸ் ஜானகி பாடிய பாடல்கள் எல்லாம் தேனில் விழுந்த பலாச்சுளை போல இசை ரசிகர்களுக்கு என்றென்றும் தித்திக்கும் இனிய பாடல்கள்தான்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நடந்த விழாவில் நடந்த பாட்டுப் போட்டியில் எஸ்பிபி கலந்துக்கொண்டு பாடியிருக்கிறார். அப்போது அவர் சினிமாவில் பாடகராக அறிமுகமாகவில்லை. அந்த விழாவுக்கு போன எஸ் ஜானகி, அவரது பாடலை கேட்டு அசந்து போயிருக்கிறார். முதல் பரிசு எஸ்பிபிக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் அப்போது கூறியதை எப்போதுமே எஸ்பிபி சொல்வது வழக்கமாக இருந்தது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய பின்னணி பாடகி எஸ் ஜானகி கூறியதாவது, நான் ஒரு விழாவுக்கு போயிருந்தேன். அங்கு நடந்த பாட்டு போட்டிக்கு நான் நடுவராக போகவில்லை. பரிசு கொடுக்கும் ஒரு விருந்தினராக தான் போயிருந்தேன். அப்போது பாட்டு போட்டியில் பரிசுக்கு தேர்வானவர்களை மேடையில் மீண்டும் பாட வைத்தார்கள்.
அப்போது அங்கிருந்த எஸ்பிபியும் பாடினார். இன்னொருவரும் பாடினார். இருவருமே பாடியது நன்றாக இருந்தது. அப்போது எஸ்பி பாலசுப்ரமணியம் மிகவும் நன்றாக பாடினார். அப்போது நான் எஸ்பிபிக்கு முதல் பரிசு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொன்னேன்.
அப்போது தன்னுடைய சொந்த குரலில் எஸ்பிபி அங்கு நன்றாக பாடினார். கடவுள் தனக்கு கொடுத்த சொந்த குரலில் அவர் அங்கு பாடினார். அங்கே பாடிய இன்னொருவரும் நன்றாக பாடினார். ஆனால் அவர் கண்டசாலா குரலை அப்படியே வெச்சு பாடியிருந்தார்.
அப்போது எஸ்பிபியிடம், நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க. சினிமா ஃபீல்டுக்கு வந்தால் மிக நல்ல பாடகராக முன்னுக்கு வருவீங்க என்று சொன்னேன். நான் அப்போ சொன்னதை எப்பவும் மனசுல வெச்சிக்கிட்டு எப்போது எங்கே பேசினாலும் அதை அவர் மறக்காமல் சொல்லிக்கிட்டே இருப்பார் என்று பாடகி எஸ் ஜானகி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். சமீபத்தில் பாடகி எஸ் ஜானகி மறைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.





