- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் டபுள் சென்சுரி அடித்த ஜனநாயகன் - லியோ படத்தின் வசூலை தளபதி இந்த...

6 நாட்களில் டபுள் சென்சுரி அடித்த ஜனநாயகன் – லியோ படத்தின் வசூலை தளபதி இந்த முறை முறியடிப்பாரா?

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 23ம் தேதி வெளியானது. நடிகர் விஜய் நடித்த கடைசி படம் என்பதாலும் 6 மாதங்களாக சென்சார் பிரசனை காரணமாக முடங்கி கிடந்த நிலையில் திரைக்கு வந்த படம் என்பதாலும் இந்த படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

ஆனால் ஏற்கனவே இந்த படம் இணையத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும் இந்த படத்துக்கு சென்சார் தரப்பு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகையும் பெரும் அளவில் குறைந்தது. வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் முன்பதிவு ஓரளவு சிறப்பாக இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

ஆனால் வார நாட்கள் ஆரம்பமான பிறகு ஜனநாயகன் படத்துக்கு முன்பதிவு என்பது மிகவும் வெகுவாக குறைந்துள்ளது. பெரும்பாலான தியேட்டர்களில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்கள் காணப்படுகின்றனர். நடிகர் விஜயின் முந்தைய படங்களை காட்டிலும் ஜனநாயகன் படத்திற்கான வசூல் எதிர்பார்த்த வசூல் அமையவில்லை என்றும் தெரிகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 27 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 2வது நாளில் அது ரூ. 13 கோடியாக குறைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ரூ. 22 கோடிகளை கடந்து வசூல் ஆகியுள்ளது. இதுதான் தமிழ்நாட்டின் வசூல் நிலவரமாகஇருந்தது. இந்நிலையில் ஜனநாயகன் படம் உலகளவில் மொத்தம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்த 8வது படமாக ஜனநாயகன் படம் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக மெர்சல் சர்கார் பிகில் மாஸ்டர் பீஸ்ட் லியோ தி கோட் ஆகிய 7 படங்கள் ரூ. 200 கோடி வசூலை கடந்த படங்களாக இருந்தன. இவற்றில் லியோ படம் 600 கோடி ரூபாய், தி கோட் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன.

அதனால் ஜனநாயகன் படம் லியோ படத்தின் ரூ. 600 கோடி வசூலை முறியடிக்க போகிறதா அல்லது தி கோட் படத்தின் ரூ. 400 கோடி வசூலை முறியடிக்கிறதா என்பது இந்த வார இறுதிக்குள் தெரிந்து விடும். ஆனால் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டமே இல்லாததால் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலை கடப்பதே சிரமம்தான் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்