- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 வருஷமாக ஒரு இயக்குனரை நம்பி ஏமாந்தேன், அவர் பட வாய்ப்பு கொடுப்பாருன்னு அவர் பின்னாடியே...

6 வருஷமாக ஒரு இயக்குனரை நம்பி ஏமாந்தேன், அவர் பட வாய்ப்பு கொடுப்பாருன்னு அவர் பின்னாடியே போயிட்டேன் – நடிகர் அப்புக்குட்டி தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் அப்புக்குட்டி. குறிப்பாக வெண்ணிலா கபடிக்குழு சுந்தரபாண்டியன் வீரம் அழகர்சாமியின் குதிரை மரியான் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அப்புக்குட்டி கூறியதாவது, நடிக்க வந்த புதிதில் சினிமாவில் வாய்ப்புகளை தேடி அலைவோம். நாளைக்கு ஷூட்டிங் என்று அழைப்பார்கள். பெரிய கேரக்டராக இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் எங்காவது ஒரு ஓரத்தில் நிற்க வைத்து விடுவார்கள். நமக்கு அங்கேயே மனசு உடைந்து போய்விடும்.

- Advertisement -

இது ஒருநாள் இல்லை. பல நாட்கள் இப்படி நடக்கும். இது எனக்குன்னு இல்லே. எல்லாருக்குமே அதுதான் நிலமை. ஒரு கற்பனையில்தான் போவோம். நமக்கு நல்ல கேரக்டர் இந்த படத்தில் கிடைச்சிடும் என்று. ஆனா கிடைக்குமா என்றால் அது கஷ்டம்தான். ஆனால் அது அப்படிதான் போவும்.

எனக்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை கொடுத்த படங்கள் இருக்கிறது. அதற்கு முன்பாக சொல்ல மறந்த கதை என்ற ஒரு படம் பண்ணினேன். தென்றல் 9 ரூபாய் நோட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என அவரது படங்களில் இயக்குனர் தங்கர்பச்சான் எனக்கு ரெகுலராக சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்.

- Advertisement -

இவன் நல்லா நடிக்கிறான். சொல்றதை கேட்ச் பண்ணிட்டு நல்லா பண்றான் என்று தொடர்ந்து எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார். டைரக்டர் இல்லை என்றால் ஒரு நடிகராக யாரும் தன்னை நிரூபிக்கிறது உண்மையிலேயே ரொம்பவும் கஷ்டம். ஒரு நடிகரே ஒரு நடிகருக்கு ஆதரவு தருவது என்பது கஷ்டம். நான் ஜெயித்த பிறகு நல்ல நடிகர் என்று சொல்வார்கள். ஜெயிக்கறதுக்கு முன்னாடி யாரும் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அது கஷ்டம்தான்.

நான் ஒரு காலகட்டத்தில் ஒரு இயக்குனரை நம்பி அவர் பின்னாடியே ஆறு ஏழு வருஷங்களாக போனேன். அவர்தான் வாய்ப்பு தருவார். வாழ்க்கை தருவார். நாம தப்பே செஞ்சாலும் அவர் நல்லா நம்மை நடிக்க வெச்சிடுவார் என்று நம்பினேன். 6 வருஷமா அவரது வீட்டுக்கு போக வேண்டியது, அவருக்கு ஏதாவது தேவைன்னா செய்ய வேண்டியது வர வேண்டியது. வேற எங்குமே பெரிசா ட்ரை பண்ணலே. அவர் படம் பண்ணும்போது வாய்ப்பு தரவில்லை. அவரால் கொடுக்க முடியலே என்று நடிகர் அப்புக்குட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்