- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவை பார்த்து நடுங்குவார்கள்.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த் சீக்ரெட்

இளையராஜாவை பார்த்து நடுங்குவார்கள்.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த் சீக்ரெட்

- Advertisement -

அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் இசை சாமானியர்களிடமும் சென்று சேர்ந்தது. அன்னக்கிளிக்கு பிறகு இளையராஜா தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தார். அவரது இசை இல்லாத படங்களே இல்லை. ஒரு நாளைக்கு 4 முதல் 5 படங்கள்வரை இசையமைத்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இளையராஜாவின் இசை எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அதேபோல் அவரது நடவடிக்கையும், பேச்சும் சில சமயங்களில் விமர்சனத்தை பெறுபவை. இளையராஜா தலைக்கணம் உடையவர்; யாரையும் மதிக்கமாட்டார் போன்ற வாதங்கள் முன்வைக்கப்படும். ஆனால் இளையராஜாவுக்கு இருப்பது தலைக்கணம் இல்லை கர்வம். அந்த கர்வம்தான் அவரது கவசம் அவரைப் போல் சிறந்த குணமுடைய மனிதரை பார்க்கவே முடியாது என அவரது ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

இதற்கிடையே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்து 90களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதிலிருந்து தமிழ் சினிமா இசை என்ற பேச்சை எடுத்தால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்றுதான் பலரும் பேச்சை ஆரம்பிப்பார்கள். அது இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மேலும் இருவருக்கும் பலத்த போட்டி இருப்பதாகவும் பலர் கூறுவார்கள்.

இந்நிலையில் இளையராஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இசையமைப்பாளர்க என்றாலே குடிப்பார்கள்; போதை பொருட்களை எடுத்துக்கொள்வார்கள்; பெண்களுடன் சுற்றுவார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் பாட போகிறாயா, இசையமைக்கப்போகிறாயா என்று சொல்லிவிட்டு அதெல்லாம் செய்யாதே என பயப்படுவார்கள்.

ஆனால் அதனை இளையராஜாதான் மாற்றிக்காட்டினார். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு சாமியார் மாதிரி. எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இசையை மட்டும் கொடுத்தார். அவரை பார்த்தாலே நடுங்குவார்கள். ஏன் நடுங்குவார்கள் என்றால் அவரது கேரக்டரை பார்த்துதான். அந்த விஷயத்தை அவரிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன். நான் இசையமைப்பாளராக மாறிய பிறகு அதனை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன்.

அதனால்தான் அதிகாலை மூன்று மணிக்கு ரஹ்மான் ஸ்டூடியோவிலிருந்து ஃபோன் போனாலும் வீட்டில் இருப்பவர்கள் தைரியமாக ஸ்டூடியோவுக்கு அனுப்புவார்கள் ” என்றார். இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசித்தவர் என்பது இதற்கிடையே நினைவுகூரத்தக்கது.

மேலும் அந்தப் பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இல்லாம் இருந்திருந்தால் என்ன ஆகியிருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “என் அம்மா இசைதாண்டா என்று சொல்லிவிட்டார். நானும் உள்ளே போய்விட்டேன். இவ்வளவுதான் காசு கொடுப்பார்களா என்று நினைத்து வேலை செய்யமாட்டேன். எவ்வளவு கொடுத்தாலும் அதற்காக 1000 சதவீதம் உழைப்பை போட்டு செய்வேன்” என்றார்.

சற்று முன்