- Advertisement -
Homeபொழுதுபோக்குவயிற்றில் இருந்த குழந்தை என்னுடைய இசை கேட்டு உயிர் பிழைத்தது - இசைஞானி இளையராஜா சொன்ன...

வயிற்றில் இருந்த குழந்தை என்னுடைய இசை கேட்டு உயிர் பிழைத்தது – இசைஞானி இளையராஜா சொன்ன உண்மை சம்பவம்!

- Advertisement -

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து அவர் இயக்கிய கர்ணன் மாமன்னன் வாழை பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. இப்போது அவரது இயக்கத்தில் மஞ்சணத்தி என்ற புதிய படம் உருவாகிறது.

இந்த படத்தில் கதிர் பிரியங்கா மோகன் ஹயார்டு லோகர் பூர்ணிமா ரவி விது விக்னேஷ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் பார்சூன் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

- Advertisement -

மஞ்சணத்தி படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு காட்சியை தொடங்கி வைத்து இசைஞானி இளையராஜா பேசியதாவது, நான் காடு மேடுகளிலும் முள்ளு காடுகளிலும் வளர்ந்தவன். அங்கிருந்து எப்படியோ இசையை கற்றுக்கொண்டு முன்னேறினேன்.

இசையை சொல்லித் தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஒரு தாகத்தோடு நானே இசையை கற்றுக் கொண்டேன். உலகில் உள்ள மிகப்பெரிய மேதைகள் எல்லாம் சிறு வயதிலேயே பியானாவை பார்த்து கற்றுக் கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவை பார்ப்பதற்கே 27 வயதாகி விட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன்.ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது.

- Advertisement -

எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை. இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும். ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் கர்ப்பிணி பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

அப்போது என் இசையை கேட்க செய்துள்ளனர். 2 நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் 3வது நாள் அறுவை சிகிச்சை முன்பு பரிசோதித்த போது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்த பெருமையும் இல்லை. இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியை கொடுத்திருக்கிறார். நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ அதுதான். சரஸ்வதி எனக்கு கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜூடன் இணைந்து உருவாக்குகிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்