- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 பட பூஜையில் விஜய்க்கு கிடைத்த அன்பு பரிசு, சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் நீங்க...

தளபதி 69 பட பூஜையில் விஜய்க்கு கிடைத்த அன்பு பரிசு, சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் நீங்க அதுதான் தலைவா.. என ரசிகர்கள் ஆரவாரம்!

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமான தி கோட் என அழைக்கப்படும் இந்த படம் கடந்த மாதம் 5ம் தேதி வெளியானது. 25 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 460 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 385 கோடி என்ற நிலையில், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு இது நல்ல லாபமாக தான் இருந்தது.

இந்த படத்தில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி சிவா சில காட்சிகளில் நடித்திருந்தார். அவர் பல படங்களை தயாரித்துள்ள நிலையில், சமீப காலமாக பல படங்களில் நடிக்கவும் செய்கிறார். தி கோட் படத்தில் மகன் விஜயை, அப்பா விஜய் சந்திக்கும் காட்சிகளில் விஜயுடன் அம்மா கிரியேசன்ஸ் சிவாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தனது அடுத்த படம் மற்றும் கடைசி படமாக தளபதி 69 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. இன்று பையனூரில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தை வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1 படங்களை இயக்கிய எச் வினோத் டைரக்ட் செய்கிறார்.

தளபதி 69 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பதை படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அவர்களது போஸ்டர்களுடன் அறிவிப்பு வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நேற்று நடந்த தளபதி 69 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் டி சிவா, தி கோட் படத்தின் வெற்றிக்கு பரிசாக, நடிகர் விஜய்க்கு ஆங்கில எழுத்துகளில் GOAT என்ற எழுத்துக்களை கொண்ட மோதிரத்தை பரிசளித்து இருக்கிறார். தனது விரலில் உள்ள அந்த மோதிரத்தை காட்டியபடி விஜய் தந்துள்ள போஸ், அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியாகி வைரலானது.

அதாவது The Greatest of All Time என்பதன் சுருக்கமாக தான் அந்த கோட் என்ற வார்த்தை படத்துக்கு வைக்கப்பட்டது. எல்லா நேரங்களிலும் அவர் மிகச் சிறந்தவர் என்பதுதான் அதன் பொருள் என்ற நிலையில், சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இனி நீங்கள் எல்லா நேரங்களிலும் மிகச் சிறந்தவர்தான் தலைவா என்று தளபதி ரசிகர்கள் கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்