- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் என்னால் மற்ற இயக்குனர்களுக்குதான் பெரிய பாதிப்பு - இயக்குனர் மாரி செல்வராஜ்...

தமிழ் சினிமாவில் என்னால் மற்ற இயக்குனர்களுக்குதான் பெரிய பாதிப்பு – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நிறைய படங்களை இயக்கி கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறும் பல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால் ஒரே படத்தின் மூலம் ரசிகர்களை மொத்தமாக கவர்ந்து விடும் இயக்குனர்களும் இருக்கவே செய்கின்றனர். படங்களின் எண்ணிக்கையை விட ரசிகர்களின் அபிமானத்தை பெறும் இயக்குனர்களாகவும் அவர்கள் வலம் வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் கதிர் கயல் ஆனந்தி மாரிமுத்து யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் இல்லாத இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதில் போலீஸ் எஸ்பி யாக நட்டி நடித்திருந்தார். தங்களது உரிமைக்காக போராடும் கிராம மக்களை அடித்து துன்புறுத்தி கொல்லும் அவரை படத்தின் நாயகன் தனுஷ் இறுதியில் கொல்வதே படத்தின் கதையாக இருந்தது.

கர்ணன் படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படமும் பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் சாதியம் பேசும் படமாக இருந்தது. இதில் எம்எல்ஏ கேரக்டரில் குணச்சித்திர நடிப்பில் வடிவேலு நடிப்பு வேற லெவலில் இருந்தது.

அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் வெளியானது. இது அவரது சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படமும் வரவேற்பை பெற்ற நிலையில் உரிமைகளை பேசும் சாதி அடக்குமுறைகளை எதிர்க்கும் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்கும் குறியீடுகளே மாரி செல்வராஜின் படங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில், நான் என்னுடைய படங்களில் கதை சொல்லும் விதத்தில் ஒரு மனிதரை மேலே அல்லது கீழே என இழிவாக காட்டக் கூடாது என்ற செயலலை செய்திருக்கிறேன். என்னுடைய இந்த செயல் தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்