- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, இந்த ருத்ராட்ச மாலையை திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் போனபோது எங்க தாத்தா வாங்கிட்டு வந்து வீட்டில் பூஜை பண்ணி எங்க தாத்தா எனக்கு போட்டுவிட்டார். அப்போ நான் ஜார்ஜியாவில் படிச்சிட்டு இருந்தேன். இந்த மாலையை வைத்து தினமும் காயத்ரி மந்திரம் சொல்லி தியானம் பண்ணனும்ன்னு சொன்னார். ஆரம்பத்துல நான் கேட்கலே. ஆனா தேர்வு எழுதற அன்னைக்கு இந்த மாலையை போட்டு பூஜை பண்ணிட்டு போனேன். தேர்வு நல்லா எழுதினேன். அன்னையிலிருந்து இப்போ தினமும் அதை வைத்து பிரார்த்தனை பண்ணுவேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார்.





