- Advertisement -
Homeபொழுதுபோக்குவேற பெயரே கிடைக்கலையா, அது பிளாப் ஆன பழைய படமய்யா - சிவகார்த்திகேயனை கிண்டலடித்த நெட்டிசன்கள்

வேற பெயரே கிடைக்கலையா, அது பிளாப் ஆன பழைய படமய்யா – சிவகார்த்திகேயனை கிண்டலடித்த நெட்டிசன்கள்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்கள் பலவும் சமீபமாக தோல்வி படங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக அயலான் படம், ஆறு ஆண்டுகளுக்கு பின், பல போராட்டங்களை கடந்து ரிலீஸ் ஆனது. ஏலியன் நடித்த படம் என்ற ஒரு அம்சத்தை தவிர, இதில் வேறு எதுவுமே ரசிகர்களை கவரும் விதமாக இல்லை.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளாரக இருந்து சினிமாவில் தன் வாழ்க்கையை துவங்கிய அவருக்கு மெரினா படம் கைகொடுத்தது. முதல் படத்தில் நடிகை ஓவியா ஜோடியாக நடித்திருந்தார். படத்தை, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், மாவீரன் போன்ற படங்கள் வெற்றியான படங்களாக அமைந்ததால் சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக மாறினார். அவரது நடிப்பில் ரஜினி தெரிவதால் மிக விரைவாக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

ஆனால் ஹீரோ, டான், மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல், சீமராஜா என பல படங்கள் தொடர்ந்து தோல்வியின் பக்கம் சென்றதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக குடும்பம், குடும்பமாக வரும் ஆடியன்ஸ் எண்ணிக்கை தியேட்டரில் கணிசமாக குறைந்தது.

- Advertisement -

இதற்கிடையே இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியதும் அவரது இமேஜை 50 சதவீதம் காலி செய்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக சமூக வலைதளங்களில் அனல் பறந்தது. ஆனால் கடைசி வரை கமுக்கமாக இருந்துவிட்டார் சிவகார்த்திகேயன். இதுவும் ஒரு நல்ல ஸ்டேடடர்ஜிதான் என்றும் பலர் அவரது மௌனத்தை பாராட்டினர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டு, நேற்று படத்தின் டைட்டில் வெளியானது. அமரன் என்ற பெயரில் கடந்த 1992ல், நவரச நாயகன் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் வெளிவந்து பயங்கர பிளாப் ஆன படம். வெத்தல போட்டு சோக்குல என கார்த்திக் பாடிய பேமஸ் பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது. ஓடாத இந்த படத்தோட பேரை வெச்சிருக்காங்களே, என்ன ஆகப் போகுதோ என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஏம்பா, வேற பேரே உங்களுக்கு கிடைக்கலயா, என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்