- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தா… இதை வெச்சுக்க, அவர் கொடுத்த அந்த 500 ரூபாய்… - குணச்சித்திர நடிகர் இளவரசு...

இந்தா… இதை வெச்சுக்க, அவர் கொடுத்த அந்த 500 ரூபாய்… – குணச்சித்திர நடிகர் இளவரசு சொன்ன உருக்கமான தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் இளவரசு. முதல் மரியாதை கிழக்கு சீமையிலே போன்ற பாரதிராஜா இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்தான் இளவரசு. பிறகு ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார்.

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வில்லன் நடிகர் மகாநதி சங்கருக்கு திருநெல்வேலி பாஷையில் பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் இளவரசுதான். பல படங்களில் அப்பா மாமா மாமனார் அண்ணன் தம்பி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இளவரசு. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக திறமையான நடிகர் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

- Advertisement -

குறிப்பாக சென்னை 28 முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார் கலாபக் காதலன் பொற்காலம் ஆட்டோகிராப் சீனாதானா 001 என்ஜிகே சதுரங்க வேட்டை டாக்டர் கலகலப்பு இம்சை அரசன் 23ம் புலிகேசி திரு மாணிக்கம் பாண்டி என பல படங்களில் நடித்துள்ள இளவரசு, தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் இயக்குனர் பாரதிராஜா குறித்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.

நான் காரை ஓட்டி வந்து அவரது வீட்டில் அவரை விட்டுவிட்டுக் கிளம்பும் நேரத்தில், யாருப்பா நீ? என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா கேட்டார். சார் நான் கண்ணன் சார் அசிஸ்டண்ட் என்று சொன்னதும் ஆழமாகப் பார்த்தார். உள்ளே வா என்று அழைத்து அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். பவ்யமாக பின் தொடர்ந்தேன். பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின்போதே ஒளிப்பதிவாளர் கண்ணனிடம் நான் உதவியாளராகச் சேர்ந்துவிட்டேன். இது முதல் மரியாதை படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம். இயக்குநருக்கு ஓட்டுநர் இல்லாத நாட்களில் நான் கார் ஓட்டப்போவது வழக்கம்.

- Advertisement -

அந்த சமயத்தில் 3 நாளாக நான் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அதை கவனித்தவர்தான் என்னை விசாரித்துவிட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ‘இந்தா, இதை வெச்சுக்க. உனக்கு எப்ப செலவுக்கு காசு வேணும்னாலும் தயங்காம என்கிட்ட வந்து கேளு’ என்றவாறு என்கையில் 500 ரூபாய் தாள் ஒன்றைத் திணித்தார். அவருக்கு கார் ஓட்டுவதையே பாக்கியமாக நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு, அவர் கையால் பணம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

இந்த மகிழ்ச்சியோடு அந்த ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் அவரது இல்லத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் இருக்கும் என் அறை வரைக்கும் நடந்தே சென்றேன். 1980களில் 500 ரூபாய் என்பது பெரிய மதிப்பு மிக்கது. அதைவிட நான் ஆராதித்த இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து பெற்ற தருணம் எனக்கு பெரும் மகிழ்ச்சியானது என்று அந்த பதிவில் நடிகர் இளவரசு உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்