நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்த வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலா இதனை இயக்குகிறார். தனுஷின் 51வது திரைப்படமாக இது உருவாகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் அழுக்கு சட்டை, நீண்ட தாடியுடன் பிச்சைக்காரன் கெட் அப்பில் தனுஷ் இருந்தார். தனுஷின் லுக்கை பார்த்து பலரும் லைக்ஸ் களை அள்ளி தெளித்தனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை பகுதியில் நடைபெற்றது. தற்போது பாங்காங்கிற்கு பட குழு சென்றுள்ளது. இதில் பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் எப்படி கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பதே கதை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நாகர்ஜுனாவுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் பலரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், குபேராவும் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷின் அடுத்த திரைப்படம் குறித்த டாபிக் தான் கோலிவுட்டில் நிலவி வருகிறது.
அவர் ஏற்கனவே மாரி செல்வராஜுடன் நடிப்பதாக இருக்கிறது. ஆனால் இயக்குனர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருவரின் கூட்டணி இணைய நாளாகும் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்துடன் தனுஷ் இணைந்து பணியாற்ற போவதாக தகவல் வெளியானது.
ஆனால் சிதம்பரம் வேறு ஒரு நடிகர் படத்தில் பிஸியாக இருப்பதால், தற்போதைக்கு அது நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில், ரங்கூன், சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனது அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியன் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





