- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தில் நான் நடிக்க காரணம் என்ன தெரியுமா? டெல்லியில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படையாக...

கங்குவா படத்தில் நான் நடிக்க காரணம் என்ன தெரியுமா? டெல்லியில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசிய நடிகர் சூர்யா – உண்மையா தான் சொல்கிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. முன்னணி நடிகர்கள் ஒருவராக அவர் இருக்கிறார். ஆனால் சமீபமாக அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக ஜெய் பீம், சூரரை போற்று படங்களுக்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் அதிகளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. பெரிய வெற்றியையும் பெறவில்லை.

அதே நேரத்தில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் சூர்யாவாக வந்தபோது ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றார். ஆனால் என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம், காப்பான், எதற்கும் துணிந்தவன் போன்ற சூர்யாவின் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன.

- Advertisement -

இதற்கிடையே டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடிக்க சூர்யா மறுத்துவிட்டார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்திலும் சில நாட்கள் நடித்துவிட்டு, சூர்யா அந்த படத்தில் இருந்தும் விலகிவிட்டார். இப்படி முன்னணி இயக்குனர்களின் படங்களிலிருந்து அவர் விலகியது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை, அதிருப்தியை ஏற்படுத்தியது.

அடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீசாகிறது. சரித்திர கால பின்னணியை கொண்ட இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கங்குவா படக் குழுவினர் பங்கேற்று வருகின்றனர். மேலும் வருகிற 26ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கங்குவா படத்தின் மிகப் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கங்குவா படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.

- Advertisement -

அந்த நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா கூறுகையில், கஜினி சிங்கம் 24 ஜெய்பீம் போன்ற படங்களில் நடிக்கவே நடிகர்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் கங்குவா போன்ற படங்களில் நடிக்க யாரும் முயற்சிப்பதில்லை. பிரேவ் ஹார்ட் போன்ற படங்களை பார்த்து வியப்படும் இந்தியாவில் ஏன் கங்குவா போன்ற படங்களை உருவாக்குவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதன் வெளிப்பாடுதான் கங்குவா படத்தில் நான் நடிக்க காரணம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் சூர்யா பேசுகையில், இயக்குனர் சிவா விஷூவலாக சிறப்பான படங்களை எடுக்கும் திறமை கொண்டவர். கங்குவா படத்தை தொடர்ந்து 170 நாட்கள் அவர் இயக்கினார். மிகவும் கடினமான பல செயல்பாடுகளை இந்த சூட்டிங்கில் படக் குழுவினர் மேற்கொண்டனர். இதற்கான லவ் ரசிகர்களிடமிருந்து திரும்பவும் எனக்கு இந்த படத்தின் வெற்றியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நடிகர் சூர்யா பேசியிருக்கிறார். அவர் பேசியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்