நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாக நடித்தவர். குறிப்பாக கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் துவக்கத்தில் இணைந்து நடித்த பல தமிழ் படங்களில் இருவரும் சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். கடைசி வரை ரஜினி வில்லனாகவே இருப்பார். அல்லது கடைசியில் நல்லவராக மாறிவிடுவது போல காட்டி விடுவர்.
16 வயதினிலே அலாவுதீனும் அற்புத விளக்கும் மூன்று முடிச்சு என பல படங்களில் கமலுக்கு ரஜினி வில்லனாக நடித்திருப்பார். ரஜினியை வில்லன் கேரக்டரில் இருந்து பைரவி படம் மூலம் நாயகனாக மாற்றியவர் கலைஞானம். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு பிறகு ரஜினியை நாயகனாகவே பயணிக்க வைத்தது. முன்னணி நடிகராகவும் மாற்றியது.
ரஜினி ரசிகர்களை பொருத்த வரை ரஜினி படம் என்றாலே அதில் அவரது நடிப்பில் அதிக முக்கியத்துவம் பிடிப்பது அவரது ஸ்டைல்தான். சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகளில் அவர் செய்கிற ஸ்டைலும் சின்ன சின்ன சேட்டைத் தனங்களும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கும். சில நேரங்களில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
ரஜினிகாந்த் நடித்த பல பழைய படங்களில் இப்படிப்பட்ட காமெடி காட்சிகள் நிறையவே இருக்கும். ரஜினிக்கு சண்டை காட்சிகளை போலவே காமெடி காட்சிகளும் சிறப்பாக வரும். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி படங்களில் அவரை அழுத்தமான கேரக்டர்களில் காட்ட துவங்கி விட்டனர். அதனால் பல படங்களில் ரஜினியின் துருதுருப்பான காமெடி நடிப்பை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர்.
அதனால் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் கூலி படத்தில் ரஜினியை பழைய மாதிரி காட்டுவதற்கான பல முயற்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் சில காட்சிகளில் காமெடி நடிப்புக்கும் அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார். ஹீரோ வில்லத்தனம் காமெடி நடிப்பு என மூன்றும் கலந்த ஒரு ரஜினியை அவர் உருவாக்கி இருக்கிறார்.
அதனால் கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் நடித்த படங்களை காட்டிலும் கூலி படம் ரசிகர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை தரும் புதுமையான பல விஷயங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். நான் ஆரம்பத்தில் எப்படிப்பட்ட ரஜினியை திரையில் ரசித்தேனோ, அந்த ரஜினியை கூலி படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். அதனால் இந்த படம் ரசிகர்கள் மிகவும் விரும்பி கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.





