- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன் சம்பளமும் வேணாம், போனஸூம் வேண்டாம், புஸ்லி ஆனந்த் பேச்சை ட்ரோல் செய்து கலாய்த்த நெட்டிசன்கள்...

உன் சம்பளமும் வேணாம், போனஸூம் வேண்டாம், புஸ்லி ஆனந்த் பேச்சை ட்ரோல் செய்து கலாய்த்த நெட்டிசன்கள் – தளபதி பேரை இவரே கெடுத்துடுவார் போல இருக்கே என புலம்பும் கட்சியினர்

- Advertisement -

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், கடந்த மாதம் 22ம் தேதி பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற கிராமத்தில் மிக பிரமாண்டமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் உள்ள நிலையில், அவரது ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்லி ஆனந்த், கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். கட்சியின் மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கும் புஸ்லி ஆனந்த் தான் விஜய் அரசியல் சார்ந்த அடுத்தக்கட்ட நகர்வுகளை தீர்மானம் செய்து, செயல்படுத்தி வருகிறார்.

அதனால் விஜய்க்கு எந்தளவுக்கு கட்சியினர் மரியாதை, முக்கியத்துவம் தருகிறார்களோ அதே அளவுக்கு புஸ்லி ஆனந்தும் கட்சியில் மிக முக்கியமானமானவராக கட்சியின் தலைமையாக இருக்கிறார். அவர் சொன்னால் விஜய் மறுக்கப் போவதே இல்லை என்பதாலும், விஜயின் மிக நம்பிக்கையான மனிதராகவும் புஸ்லி ஆனந்த் இருப்பதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

வருகிற 27ம் தேதி தவெக கட்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், புஸ்லி ஆனந்த் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விஜய் ரசிகர் ஒருவர், தனது ஓனரிடம் வருகிற 26, 27ம் தேதிகளில் விஜய் நடத்தும் மாநாட்டில் கலந்துக்கொள்ள லீவ் கேட்பதாகவும் அதற்கு அவர் மறுப்பதாகவும் அப்போது அந்த ரசிகர், உன் சம்பளமும் வேணாம், தீபாவளி போனஸூம் வேண்டாம், வேலையும் வேண்டாம் நான் என் தலைவன் முகத்தை பார்க்க போயே ஆகணும் என்று கூறுவதாகவும் அவர் பேசியிருந்தார்.

புஸ்லி ஆனந்தின் இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் சிலர் இதை கிண்டலடித்து சம்பளம், போனஸ், வேலை வேண்டாம் என்று மறுத்த அந்த நபர், ரோட்டில் கார்களை துடைத்து விட்டு காசு வாங்கும் நிலைக்கு வந்துவிடுவது போல் காட்டி ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர். இப்படி எல்லாம் பேசி, தளபதி பேரை இவரே கெடுத்து விடுவார் போல இருக்கே என்று கட்சியினர் பலரும் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்