- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை, அதை நானே நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன் - நடிகர்...

அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை, அதை நானே நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன் – நடிகர் சரத்குமாரின் அதிரடி ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஆனால் 1990களில் அவர் நடித்த சேரன் பாண்டியன் நாட்டாமை சூரியவம்சம் நட்புக்காக போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போதும் அந்த படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

இவரது மனைவி ராதிகாவும் ஒரு முன்னணி நடிகையாக உள்ளார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய சரத்குமார், நடிகராக மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவராகவும் வலம் வருகிறார்.

- Advertisement -

சரத்குமார் நடித்த தி ஸ்மைல் மேன் என்ற திரைப்படம் வருகிற 27ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் சிஐடி போலீஸ் அதிகாரியாகவும் அதே நேரத்தில் அல்சீமர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராகவும் ஒரு முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். சமீபத்தில் போர்த்தொழில் படத்தில் இவரது கேரக்டர் அதிக வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து நடிகர் சரத்குமார் கூறியதாவது, ஏற்கனவே நான் தலைமகன் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறேன். தலைமகன் படப்பிடிப்பின் போது திடீரென அந்த படத்திலிருந்து இயக்குனர் விலக வேண்டிய சூழல் வந்ததால் அந்த பொறுப்பை எடுத்து நானே தலைமகன் படத்தை இயக்கினேன்.

- Advertisement -

மற்றபடி எனக்கு டைரக்ஷனில் மிகப்பெரிய ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து நானும் பயணிப்பது போல் ஒரு கதையை உருவாக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் ஒரு வருடத்திற்குள் அந்த பணிகள் முடிந்து விடும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரை இந்த படத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வருவதுடன் அவருடன் நான் நடிக்கும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார். நடிகர் சரத்குமார் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக ஆரம்பத்தில் இருந்தவர். அவர் மேடைகளில் பலமுறை எம்ஜிஆர் பாடல்களை பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்