- Advertisement -
Homeபொழுதுபோக்குஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்? செல்வராகவன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல்! என்ன காரணம் தெரியுமா?

ஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்? செல்வராகவன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல்! என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. வணிக ரீதியாகவும் தோல்வி திரைப்படமாக அது அமைந்தது.

எனினும் பல ஆண்டுகள் கழித்து சமூக வலைத்தளங்களில் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற குறியீடுகளை குறித்து பேசாத யூட்யூபர்களே கிடையாது. அந்தளவுக்கு காலம் தாண்டி கொண்டாடப்படும் திரைப்படமாக “ஆயிரத்தில் ஒருவன்” அமைந்தது.

“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் “சோழன் பயணம் தொடரும்” என்ற வாசகத்தோடுதான் அத்திரைப்படத்தை முடித்திருந்தார்கள். இதன் மூலம் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அப்போதே தெரிய வந்திருந்தது. சமூக வலைத்தளங்களில் மாற்று சினிமா ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாட தொடங்கியதில் இருந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர்.

அதன் படி கடந்த 2020 ஆம் ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் எனவும் 2024 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் இரண்டு வருடங்களாகியும் இத்திரைப்படத்தை குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. பல பேட்டிகளில் செல்வராகவனிடம் இது குறித்து கேட்கப்பட்டது. “அப்டேட் விரைவில் வரும்” என்று பதில் வந்ததே தவிர அப்டேட் மட்டும் வரவே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “ஆயிரத்தில் ஒருவன் 2” குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். ஆதாவது “ஆயிரத்தில் ஒருவன் 2 நடக்காது. ஒரு வெற்றிப்படம் என்றால் பார்ட் 2 வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான தோல்வி படத்தை பார்ட் 2 ஆக கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் என்ற தலைப்பை மட்டும் கொண்டு வேறு ஒரு கதையை எடுத்தால் ஒரு வேளை ஓட வாய்ப்புள்ளது. ஆனால் ஆயிரத்தில் ஒருவனின் தொடர்ச்சியாக எடுத்தால் நிச்சயமாக ஓடாது” என கூறியிருக்கிறார். இந்த தகவல் செல்வராகவன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சற்று முன்