- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வின்னர் முத்துக்குமரனுக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு? மொத்தமாக இத்தனை லட்சங்களை அள்ளிவிட்டாரா?

பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரனுக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு? மொத்தமாக இத்தனை லட்சங்களை அள்ளிவிட்டாரா?

- Advertisement -

தமிழ் சொற்பொழிவாளராக மக்களால் அறியப்பட்டவர் முத்துக்குமரன். ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்கள் வாயிலாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர். இந்த முறை விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்ற 24 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டுக்குள் முழு ஈடுபாட்டுடன் ஆர்வமாக டாஸ்க்குகளில் முத்துக்குமரன் பங்கேற்றார். அதே வேளையில் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களையும் தன் சாமார்த்தியமான பேச்சால், அவர்கள் அறியாமலேயே தன் விருப்பத்தின்படி விளையாட வைத்தார்.

- Advertisement -

ஒவ்வொரு விளையாட்டிலும் இவர் விளையாடியது மட்டுமின்றி மற்றவர்களையும் தனக்கு சாதகமாக விளையாடும்படி காய் நகர்த்தி ஒரு யுக்தியை கையாண்டார். இது பார்வையாளர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்தது. இதுபற்றி போட்டியாளர் அன்ஷிதா, நடிக்காதடா முத்து என்று பேசிய வீடியோ, டிரண்டிங் ஆகி வைரலானது.

கடைசியாக வீட்டுக்குள் இருந்த 6 பேரில், பணப்பெட்டி எடுக்கச் சென்ற டாஸ்க்கில் 2 விநாடிகள் தாமதமாக வந்த ஜாக்குலின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சௌந்தர்யா பவித்ரா முத்துக்குமரன் விஷால் ரயான் என 5 பேர் பினாலே போட்டியாளர்களாக இருந்த நிலையில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டுக்குள் முத்துக்குமரன் 105 நாட்கள் இருந்த நிலையில், தினமும் அவருக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் என்ற அடிப்படையில், 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். டைட்டில் வின்னர் 50 லட்சம் ரூபாயில் விஷால் ரூ. 5 லட்சம், பவித்ரா, ரயான் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் 9 லட்சம் அதில் குறைந்துள்ளது.

மேலும் அதில் முத்துக்குமரனும் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ. 50 ஆயிரம் முன்பே எடுத்து விட்டார். அதனால் மீதி 40 லட்சத்து 50 ஆயிரம் டைட்டில் வின்னர் தொகையாக உள்ளது. சம்பளம் மற்றும் பரிசுத்தொகை என மொத்தம் ரூ. 51 லட்சத்து 50 ஆயிரம் (வரியினங்கள் போக) முத்துக்குமரனுக்கு பல்க் அமௌண்டாக கிடைக்க உள்ளது. முத்துக்குமரன் டைட்டில் வின்னராக 100 சதவீதம் தகுதியான நபர்தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்