தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபியாக பணிபுரிந்தவர் ரமேஷ் குடவாலா. அவரது மகன்தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டாகுஸ்தி 2 ராட்சசன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாக இருக்கின்றன.
இந்நிலையில் விஷ்ணு விஷாலின் சொந்த தம்பி ருத்ராவும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாக உள்ளார். இந்த படம் நாளை மறுதினம் 11ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெறுவது என்பது அபூர்வமாக தான் நடக்கிறது. அன்று முதல் இன்று வரை புதுமுகங்கள் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறுவது ஆச்சரியமான அதிசயமாகத் தான் இருக்கிறது. ஆனால் கதைக்களம் சிறப்பாக இருந்தால் நடிகர்களை விட கதை ஜெயித்து விடுகிறது.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு புதுமுகங்கள் பிரசன்னா கனிகா கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்த படம் பைவ் ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரித்திருந்தார். இயக்குனர் சுசி கணேசன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படமாகும்.
இதையடுத்து நடிகை கனிகா மலையாளத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இப்போது எதிர்நீச்சல் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் பிரசன்னா பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது நடிகர் பிரசன்னா பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பைவ் ஸ்டார் படத்தில் நடித்த புதுமுக நடிகர் கிருஷ்ணா அதற்குப் பின் திருடா திருடா என்ற படத்தில் நடிகர் தனுஷின் அண்ணனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் பட்டியல் ஆரம்பம் ஆட்டோகிராப் உள்ளிட்ட சில படங்களிலும் கிருஷ்ணா நடித்திருந்தார். பல விளம்பர படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நாளை மறுநாள் ருத்ரா நடிப்பில் வெளியாகும் ஓஹோ எந்தன் பேபி படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் என்ற பெயரில் கிருஷ்ணா தான் இயக்கி உள்ளார். பைவ் ஸ்டார் படத்தில் நடிகராக அறிமுகமாகி 22 ஆண்டுகளில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.





