ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மக்களை கருதும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பணம் தந்து, அவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெற்று ஜெயிக்கின்றன. ஆனால் அந்த சில நூறுகள், ஆயிரம் அடுத்த 5 ஆண்டுகளில் பல ஆயிரங்களாக தங்கள் தலையில்தான் சுமத்தப்படும் என்பதை அறியாத அந்த அப்பாவி மக்கள், ஒவ்வொரு முறையும் நம்பி ஓட்டுகளை போட்டுவிட்டு ஏமாறுகின்றனர்.
ஆனால் நடிகர் விஜயை பொருத்த வரை வருகிற 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் அவர், மக்களிடம் பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கப் போவதில்லை. அவரது வெளிப்படையான அரசியல் நிர்வாகத்தை சொல்லி, லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு நேர்மையான ஜனநாயக ஆட்சியை சொல்லி தான் ஓட்டு கேட்கப் போகிறார். ஆனால் அவர் செய்யும் நலத்திட்ட உதவிகள் அவரது வெற்றியை, கட்சியை இன்னும் பலப்படுத்தும்.
கடந்த ஆண்டு நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், பத்து மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க நின்று, பல கோடி ரூபாய் பரிசுகளை மாணவ, மாணவிளுக்கு வழங்கினார். அதாவது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதலிடம் ரூ. 25000, இரண்டாமிடம் ரூ. 15,000, மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ. 10,000 பக்கம் என 234 தொகுதிகளுக்கும் பலகோடி ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இம்மாதம் 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்த மாதம் கல்வி விருதுகள் வழங்கும் விழாவை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதற்கு முன்பே மக்களை கரும் விதமாக 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சியடைந்த மாணவ மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கி அசத்தினார்.
கடந்தாண்டு விருது விழாவை சிறப்பாக நடத்தினார். இப்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், தமிழ்நாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு, பத்தாம் பொது தேர்வுகள் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள். விரைவில் நாம் சந்திப்போம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலம் முழுவதும் அதிகள அளவிலான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் விரைவில் சந்திப்போம் என்று கூறியிருக்கிறார். அதனால் இந்த ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் கல்வி விருது வழங்கும் விழா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.





