நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி பண்டிகைக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனும் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.
அமரன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பல்வேறு விஷயங்களில், அம்சங்களில் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்தளவுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன் பல விஷயங்களை இதில் ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்.
வழக்கமாக ராணுவ முகாம்கள், ராணுவ மையங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அந்நியர்களுக்கு நிச்சயமாக அனுமதி கிடையாது.ராணுவ கட்டுப்பாடு என்பது எப்போதுமே மாற்றமில்லாதது. ஆனால் அமரன்படத்தின் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக காஷ்மீரில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் பணிசெய்த ராணுவ மையங்கள், ராணுவ முகாம்கள், ராணுவ பகுதிகள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று அமரன் படக்குழுவினர் இந்த படத்தை எடுத்துள்ளனர்.
அதிலும் காஷ்மீரில் இதுவரை படப்பிடிப்பே நடத்த அனுமதிக்காத இடங்களில் ராணுவ மையங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக காஷ்மீரில் ராணுவ மையங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அமரன் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எல்லாம் எப்போதுமே சூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்பதால் அந்த இடங்களில் ராணுவ காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த இடங்கள், பணியாற்றிய இடங்கள், அவர் படுத்து தூங்கி இடங்களில் கூட காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த இடங்களில் எல்லாம் இந்த படத்தை சூட்டிங் செய்து இருக்கிறார்கள். இது கமல்ஹாசனுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கும், ராணுவ அதிகாரிகள் அவருக்கு கொடுத்து ஒத்துழைப்பும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக சாதாரண நடிகர்கள் எட்டிக் கூட பார்க்க முடியாத இடத்தில் நடிகர் கமல்ஹாசன் அமரன் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி காட்டியிருக்கிறார். ராணுவ முகாம்களில், ராணுவ தளவாடப் பகுதிகளில் முக்கிய இடங்களில் அவர் அமரன் படப்பிடிப்பை நடத்தி இருப்பது, கமல்ஹாசனுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கையே வெளிப்படுத்துகிறது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





