- Advertisement -
Homeபொழுதுபோக்குஅபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப் போகிறாரா? உண்மையில் நடப்பது என்ன?...

அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப் போகிறாரா? உண்மையில் நடப்பது என்ன? – நேரடியாக பதில் அளித்த அபிஷேக் பச்சன்

- Advertisement -

இதுவரை பல பேர் உலக அழகி போட்டியில் கலந்துக்கொண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி பல ஆண்டுகளுக்கு முன் உலக அழகிப் போட்டியில் பங்கேற்று உலக அழகியாக அறிவிக்கப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆனால் இப்போதும் கூட தன் அழகை மிகைப்படுத்திக் கொள்ளும் சில பெண்களை, பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு என சிலர் கலாய்ப்பதுண்டு.

அந்த அளவுக்கு உலக அழகி என்றாலே, ஐஸ்வர்யா ராய்தான் என்ற புகழ் இன்றும் அவருக்கு நிலைத்திருக்கிறது. இயக்குனர் ஷங்கர் ஜீன்ஸ் படம் மூலம் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய இருவர், ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன், ரோபோ 2.0 ஆகிய படங்களிலும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்முட்டிக்கும் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் அவரது நடிப்பு அழகாக, அழுத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டில் பல படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அப்போது பாலிவுட் சீனியர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் சில படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு மகள் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், முகேஷ் அம்பானி வீட்டு திருமண விழாவில், தன் பெற்றோருடன் அபிஷேக் பச்சன் பங்கேற்ற நிலையில், தன் மகளுடன் தனியாக வந்த ஐஸ்வர்யா ராய், புகைப்படங்களுக்கு போஸ் தந்ததும் வைரலானது. குறிப்பாக மாமியார் ஜெயா பச்சனுக்கும். ஐஸ்வர்யா ராய்க்கும் பயங்கரமான மோதல் இருப்பதாகவும் தகவல் பரவியது.

அதனால் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் விவாகரத்து அறிவிப்பு வெளியாகும் என சமீபகாலமாக தகவல் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகர் அபிஷேக் பச்சன், எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் தகவல் பற்றி பேச எதுவும் இல்லை. துரதிஷ்டவசமாக அனைவரும் இந்த பொய்யான தகவலை பரப்புகின்றனர். இதை ஏன் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நல்ல கதை வேண்டும் என்பதால், பிரபலங்கள் எங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை, என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்