- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் குறித்த புதிய அறிவிப்பை வீடியோவாக வெளியிட்ட நடிகர் ஆரவ் - அப்போ விடாமுயற்சி படம்...

அஜீத்குமார் குறித்த புதிய அறிவிப்பை வீடியோவாக வெளியிட்ட நடிகர் ஆரவ் – அப்போ விடாமுயற்சி படம் ஷூட்டிங் அவ்ளோதானா ?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது அஜர்பைஜானில் இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக அங்கு விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டி நிலையில் படக்குழு இருக்கிறது. ஏனெனில் மார்ச் மாதத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆனால் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே, திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல், விடாமுயற்சி படக்குழு திண்டாடி திணறி வருகிறது. காரணம் பனிமழை, மணல் புயல், கடும் குளிர், கனமழை போன்ற பல இயற்கை சீற்றங்களால் அடிக்கடி படப்பிடிப்பு தடைபடுகிறது. இதுவரை 3 முறை படப்பிடிப்புக்கு பிரேக்கப் விடப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்போது படக்குழு, அஜர்பைஜானில் தான் இருக்கிறது. ஆனால் செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த செட் ஒர்க் முடிந்த பிறகுதான் படப்பிடிப்பை துவங்க உள்ளது. இப்படியே தாமதம் நீடிப்பது, படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அதிக நெருக்கடியை தந்துள்ளது. ஏனெனில் இதுவரை அவர் 60 சதவீத படப்பிடிப்பை கூட முடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பதிலாக ஓம்பிரகாஷ் என்பவரை மகிழ்திருமேனி மாற்றி நியமித்தது அஜீத்குமாருக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்தே அவர் படப்பிடிப்பில் போதிய ஆர்வமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருவதும் அஜீத்குமாரை அதிருப்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் ஆரவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அஜீத்குமார் பைக்கில் செல்கிறார். வரும் பிப்ரவரி 17 முதல் 24 வரை, அஜீத்குமார் பைக் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அஜீத்குமார் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/C2cHHEttenN/?utm_source=ig_embed&ig_rid=61f83b63-6fb7-46e8-96c6-4c5ad43bc625

இந்த ஜனவரி மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பிப்ரவரியில் 2 வாரம் என மொத்தம் 3வாரமே உள்ள நிலையில், அஜீத்குமார் இப்படி பைக் பயணம் செல்வதால், விடாமுயற்சி படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்படுமே, ஷூட்டிங் போன இடத்தில் இவருக்கு இப்போது இந்த ஏழுநாள் பைக் பயணம் அவசியம்தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்