- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் திரைப்படத்தில் எனது ரோல் இப்படித்தான் இருக்கும்... சீக்ரெட்டை முதல்முறையாக கசிய விட்ட நடிகர் நரேன்...

ஜனநாயகன் திரைப்படத்தில் எனது ரோல் இப்படித்தான் இருக்கும்… சீக்ரெட்டை முதல்முறையாக கசிய விட்ட நடிகர் நரேன்…

- Advertisement -

ஒட்டுமொத்த இந்திய சினிமாவே தற்போது எதிர்பார்த்து இருக்கும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது ஜனநாயகன். அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் அதில் தீவிர கவனம் செலுத்தி வரும் வேளையில், தனது கடைசி திரைப்படம் இதுதான் என அறிவித்து அதில் நடித்து முடித்திருக்கிறார். அஜித் குமாரை வைத்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர்.

கர்நாடகாவில் புகழ்பெற்ற கேவிஎன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரசியல் தொடர்பான பணிகளில் தற்போது விஜய் தீவிர கவனம் செலுத்தி இருப்பதால் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகளை சென்னைக்குள்ளேயே நடத்தி முடித்திருக்கிறார்கள். இதற்காக பையனூர் படப்பிடிப்பு தளத்தைதான் அவர்கள் முழுக்க முழுக்க பயன்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

சில அவுட் டோர் காட்சிகளுக்காக மட்டும் படக்குழுவினர் கொடைக்கானல் சென்று வந்தனர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் தேதியை குறி வைத்திருக்கிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்க, ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் நடுவே கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி அதாவது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் வந்தார் விஜய். கையில் வாள் வைத்துக் கொண்டே அவர் மீசையை முறுக்கிவிடும் காட்சி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இப்படியான சூழலில் படத்தில் நடித்திருக்கும் நரேன், தனது கதாபாத்திரம் பற்றி பேசி இருக்கிறார். அதில், ஜனநாயகன் திரைப்படத்தில் நான் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். நான் வரும் காட்சிகள் படத்தில் மிக குறைவாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் அது ஒரு கெஸ்ட் ரோல் தான். இருப்பினும் அது படத்திற்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லி முடித்திருக்கிறார் நடிகர் நரேன்.

- Advertisement -

சற்று முன்