- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு ஒரு வருஷம் விலகுகிறார் நடிகர் அஜீத்குமார், அட இவ்வளவு பெரிய விஷயம் இதுல...

சினிமாவை விட்டு ஒரு வருஷம் விலகுகிறார் நடிகர் அஜீத்குமார், அட இவ்வளவு பெரிய விஷயம் இதுல இருக்கா? – குட்பேட் அக்லி படப்பிடிப்பு நடக்குமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறார். ஐதராபாத்தில் அஜீத், திரிஷா நடிக்கும் பாடல் காட்சியும், அதைத்தொடர்ந்து கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. இந்த ஷெட்யூல் முடித்த பிறகு, பேட்ச் ஒர்க் பணிகளுடன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது.

இந்த படத்தை முடித்துக்கொண்டு நடிகர் அஜீத்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களமே வெளிநாடுகளில் நடப்பதாக இருப்பதால், தொடர்ந்து வெளிநாடுகளில் படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே லேட்டஸ்ட் தகவலாக, நடிகர் அஜீத்குமார் சினிமாவில் நடிப்பை விட்டு ஓராண்டுக்கு விலகி இருக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இது ஏறக்குறைய முடிவாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. காதுக்கு அருகில் செல்லும் நரம்பில் கட்டி இருந்து அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் சில தினங்கள் ஓய்வெடுத்த நிலையில், மீண்டும் பைக்கில் டூர் கிளம்பிவிட்டார். அது மைனர் ஆபரேசன் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அஜீத்குமாருக்கு ஒரு மேஜர் ஆபரேசன் செய்யப்பட உள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு ஆண்டுக்கு சினிமாவில் நடிக்காமல் முற்றிலும் ஓய்வில் இருக்க நடிகர் அஜீத்குமார் முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இப்போது குட்பேட் அக்லி படப்பிடிப்பில் அஜீத்குமார் நடிக்க வேண்டியிருப்பதால், அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகே, இந்த ஒரு ஆண்டு காலம் ஓய்வு என்ற திட்டத்தில் அஜீத்குமார் இருக்கிறார். இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்திலும், ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஏற்கனவே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

ஆனால் கங்குவா 2 படத்தை முடித்த பிறகே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க உள்ளார். அந்த படத்தை முடிக்க எப்படியும் ஒரு ஆண்டு சிறுத்தை சிவாவுக்கு தேவைப்படும் என்பதால், குட்பேட் அக்லி படப்பிடிப்பை முடித்து விட்டு இந்த ஓராண்டு ஓய்வில் அஜீத் இருக்க உள்ளார். பிறகுதான் சிறுத்தை சிவா, மோகன் ராஜா படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்