தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி போல ரஜினி கமல் போல விஜய் அஜீத்குமார் இருவரும் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். இதனால் விஜய் அஜீத்குமார் மோதல் பல ஆண்டுகளாக நீடித்தது. சமூக வலைதளங்களில் அடிக்கடி அஜீத் விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி துவங்கி இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக ஆகி விட்டார். போட்டியாளராக கருதப்பட்ட அஜீத்குமாரும் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை குறைத்துக்கொண்டு கார் ரேஸ் பைக் ரேஸ் என்று மோட்டார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இது ஏகே ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
இதற்கிடையே வெளிநாடுகளில் உள்ள போல தமிழ்நாட்டிலும் மோட்டார் கார் பந்தயங்களுக்கான ஓடுதளங்கள் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் கடந்த வாரத்தில் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு நடிகர் அஜீத்குமார் முதல்வர் விஜய்க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து மாண்புமிகு முதல்வர் என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார்.
இதை பார்த்து ஆவேசமாக ஏகே ரசிகர்கள், இத்தனை ஆண்டுகளாக உங்கள் ரசிகர்களாக விஜய் ரசிகர்களை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். உங்களுக்கு ஆதரவாக நிறைய அவமானங்களை விமர்சனங்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். ஆனால் விஜய்க்கு நீங்கள் எப்படி ஆதரவு தரலாம் என்று கண்டபடி இணையத்தில் விமர்சித்து வெறுப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் லண்டனில் நடந்த வரும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர் ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பாதையில் மிச்சலின் லீமேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை முதல்வர் விஜய் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இதற்கு அஜீத்குமார் செய்தியாளர்களிடம் நன்றி தெரிவித்து விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து முதல்வர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் அஜீத்குமார் பேசி வருவது ஏகே ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது. சினிமாவில் இருக்கும் போது எதிரும் புதிருமாக இருந்து விட்டு இன்று அரசியல் விளையாட்டு என இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்து நட்பு பாராட்டுகின்றனர். அப்படி என்றால் இதுவரை உங்களுக்காக அடித்துக்கொண்ட ரசிகர்கள் நாங்கள் எல்லாம் வடிகட்டிய முட்டாள்களா? என்று ஏகே குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





