- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலாவின் வணங்கான் பட டைட்டில் பிரச்னை என்னதாங்க ஆச்சு? கடைசியில் இப்படி ஒரு தீர்ப்பை சொல்லி...

பாலாவின் வணங்கான் பட டைட்டில் பிரச்னை என்னதாங்க ஆச்சு? கடைசியில் இப்படி ஒரு தீர்ப்பை சொல்லி விட்டதா நீதிமன்றம்? – நாங்க படத்தையே முடிச்சுட்டமே ப்ரோ…!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் துவங்கப்பட்ட படம் வணங்கான். ஆனால் ஷூட்டிங் துவங்கிய சில வாரங்களிலேயே சூர்யாவுக்கும், இயக்குனர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதன்பிறகு சூர்யா கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடித்தார்.

வணங்கான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் மற்றொரு மைல் கல்லாக இந்த படம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வாய் பேசாத கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த வாரத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த கவனத்தை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தை பார்த்த வணங்கான் பட தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் மிரண்டு போயுள்ளனர். இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் அருண் விஜய்க்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. இப்போது ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் அருண் விஜய், இந்த படத்துக்கு பிறகு ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளத்தை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த படத்தின் வெற்றியை அந்த அளவுக்கு நம்பும் அளவுக்கு படத்தை காட்சிக்கு காட்சி பார்த்து பார்த்து செதுக்கியது போல, பாலா உருவாக்கி இருப்பதாகவும், படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு சிறப்பம்சத்தை தந்து, படத்தின் கதையை வேற லெவலில் கொண்டு சென்றிருப்பதாகவும் டைரக்டர் பாலாவை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே வணங்கான் படத்தின் டைட்டில் பஞ்சாயத்து ஒன்று கிளம்பி, அதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அதாவது சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர், கேமரா மேன் சரவணன் என்பவர், வணங்கான் என்ற டைட்டிலை கில்ட் சங்கத்தில் முன்னமே பதிவு செய்திருப்பதாகவும், படத்தின் டீசரும் எடுத்திருப்பதாகவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த படத்தில் பிக்பாஸ் வின்னர் ஆரவ் நாயகனாக நடிக்கிறார்.

ஆனால், டைரக்டர் பாலா இயக்கியுள்ள வணங்கான் படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்த பதிலில், நாங்கள் வணங்கான் என்ற பெயரில் படத்தையே எடுத்து முடித்துவிட்டோம். இப்போது ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. எனவே, எங்களது படம் எடுக்கப்பட்டு முழுமையடைந்து ரிலீஸ் ஆக உள்ளதால், வணங்கான் டைட்டில் எங்களுக்கே சொந்தம் என்று கூறியதால், கோர்ட் அதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால் பாலாவின் வணங்கான் படத்துக்கு இருந்த டைட்டில் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்