தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், 2 ஆண்டுகளில் தமிழக சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்து 108 இடங்களில் வெற்றி பெற்றார். எனினும் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தார்.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 100 நாட்களை கடந்த நிலையில் அவரது ஆட்சி எதிர்பார்த்த அளவில் இல்லை என்று மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எம்எல்ஏக்களுக்கு கார் அதை பராமரிக்க ரூ. 75 ஆயிரம் 1200 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் 5.58 கோடியில் முதல்வர் அறை புதுப்பிப்பு என விஜயின் செயல்பாடுகள் மக்களை கடுப்பேற்றி வருகிறது.
மேலும் சட்டசபையில் தவெக அமைச்சர்கள் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. குறிப்பாக விஜய் முதல்வர் பதவிக்குரிய மாண்புடன் செயல்படாமல் சட்டசபைக்குள் சில உடல்மொழிகளை வெளிப்படுத்தி மக்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறார்.
தவெக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிற நிலையில் இப்போது தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏக்களாகி பிறகு தவெக பக்கம் தாவிய சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் மீண்டும் தவெக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அதாவது அதிமுக தலைமையில் போட்டியிட்ட அவர்களே மீண்டும் தவெக சார்பில் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் அந்த தொகுதி எம்எல்ஏ இறந்தால் தான் நடக்கும். ஆனால் தங்களது சுய லாபத்துக்காக பதவியேற்ற 10 நாட்களில் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி தாவிய இவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவுகளை செய்தும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஓட்டு போட்ட மக்களை துச்சமாக நினைத்து புறந்தள்ளி, தங்களை வேட்பாளராக அறிவித்து வெற்றிக்கு உழைத்த அதிமுக கட்சி தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு தவெக பக்கம் தாவிய இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஓட்டு கேட்டு இவர்கள் தொகுதி பக்கம் வந்தால் மக்களே துரத்தியடிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பல கோடி வீண் செலவு இவர்களால்தான் என்று மக்கள் பொங்கி வருகின்றனர். அதனால் விஜய்க்கு இந்த இடைத் தேர்தல் நிச்சயமாக வெற்றியை தராது என்று கருத்து எழுந்துள்ளது.





