நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்த நிலையில் இருக்கிறார். இதையே அஜீத் ரசிகர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று குறிப்பிடுவார்கள். அதுவும் சரியே. ஏனெனில் அஜீத், விஜய் இருவருமே சம காலத்தில் சினிமாவுக்கு வந்து சாதித்து முன்னேறியவர்கள். இருவரது உயரங்களும் ஏறக்குறைய ஒன்றாக தான் இருக்கிறது.
இப்போது தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜீத்குமாரை இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்த மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க எஸ்ஜே சூர்யா கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கனாக, படத்தை வெற்றி பெற வைத்தது எஸ்ஜே சூர்யாதான்.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் பேசிய நேர்காணல் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் நான் தமிழனா இல்லையா என்ற கேள்விக்கு அஜீத்குமார் வெளிப்படையாக பதில் சொல்லி இருக்கிறார். ஏனெனில் அவர் வெள்ளையாக, அஜீத்குமார் என்ற பெயருடன் இருப்பதால் இந்த சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.
இதுகுறித்து அந்த நேர்காணலில் அஜீத்குமார் கூறியதாவது, அஜீத் குமார் என்ற பெயர் வடஇந்திய பெயர்தான். அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே மெட்ராஸ்தான். என்னோட அப்பா, மெட்ராஸை சேர்ந்த ஒரு தமிழர். அம்மா, வடநாட்டில் இருந்து வந்தவர்தான். ஆனால் அஜீத்குமார் தமிழன்தான். அதில் சந்தேகமே தேவையில்லை. அதுல யாரும் மிஸ்டேக் பண்ணிக்க வேண்டாம்.
ஆனா என்னை பேரை பார்த்துட்டு வடஇந்திய ஆளுன்னு தப்பா நினைக்கறாங்க. அவங்க எல்லாம் ஒரு நடிகனா என்னை ஏத்துக்கணும் அப்படீங்கற ஆசை உள்ளே இருக்கு. எனக்கு படிப்பிலே இன்ஸ்ட்ரஸ்டிங் கிடையாது. 10ம் கிளாஸ் வரைக்கும்தான் படிச்சேன். என்னுடைய அண்ணன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். தம்பி, அமெரிக்காவில் படிக்கிறான். இதுதான் என் குடும்ப பின்னணி என, பல ஆண்டுகளுக்கு முன் நடிக்க வந்த புதிதில் ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.





