- Advertisement -
தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் இப்போது பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. அவரை நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் கூறும் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் நடிப்பு அரக்கி யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எஸ்ஜே சூர்யா, மலையாள நடிகை மமிதா பைஜூ மற்றும் இந்தியில் நடிகை ஆலியா பட் இருவரும்தான் நடிப்பு அரக்கிகள் என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த நிலையில், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவே அவரை நடிப்பு அரக்கி என்று பாராட்டியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





