நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக மாறி வருகிறது. முதலில் இருந்த சின்ன சின்ன எதிர்மறை விமர்சனங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கிய விஜய் நடிப்பு, படத்தை வேற லெவலில் கொண்டு சென்றிருக்கிறது.
கடந்த 4 நாட்களில் ரூ. 275 கோடி வசூலை கடந்துள்ள தி கோட் படம், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் 1000 கோடி ரூபாய் இலக்கை நிச்சயம் கடந்துவிடும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. கடந்த முறை லியோ ரூ. 650 கோடி கடந்த நிலையில், தி கோட் ரூ. 1000 கோடி கடக்க அதிக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான 7 படங்கள் மிக சுலபமாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன. ஆனால் ரஜினி கூட இந்த அளவுக்கு 200 கோடி ரூபாய் வசூல் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இப்போது விஜய் நடித்துள்ள தி கோட் 8வது படமாக ரூ. 200 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தமிழ் நடிகர்களுக்கு இல்லாத பெருமை விஜய்க்குதான் கிடைத்துள்ளது.
இதற்கிடையே தி கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், நடிகர் விஜய் தனது மகளிடம் நீ யாரோட பேன் என்க, அவர் தல பேன் என்கிறார். இப்படி அவர் சொல்லும்போது பின்னணியில் மங்காத்தா தீம் மியூசிக் ஒலிப்பதால், அது அஜீத்குமார் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்போது அவர் தல என்று சொன்னது அஜீத்குமாரை அல்ல, தோனியை தான் என்று ஒரு பஞ்சாயத்துக்கு கிளம்பி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த காட்சியில் ஜீவிதா என்ற கேரக்டரில் நடித்த விஜய் மகள், கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேல் பகுதியில் நடக்கும் அந்த சண்டை காட்சியில் அவர் சொன்னது தல தோனியை தான். நிச்சயமாக அஜீத்குமாரை கிடையாது. அதே நேரத்தில் மங்காத்தா தீம் மியூசிக்கை ஒலிக்க விட்டு வெங்கட்பிரபு அதில் கோல்மால் செய்து ரசிகர்களை குழப்பி விட்டுள்ளார் என்றும் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், விஜய்க்கு தி கோட் படம் மிகவும் பிடித்திருந்தது. இந்த படம் குறித்து அஜீத்குமார் என்னிடம் பேசுகையில், டேய் படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டேன்டா, வாழ்த்துகள் என்று கூறியதாக, அந்த நேர்காணலில் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். அதனால் தல தோனியா, அஜீத்குமாரா என்ற பஞ்சாயத்து குறித்து அஜீத் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.





