- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த தி கோட் படம் டிரெய்லர் பார்த்த நடிகர் அஜீத்குமார், என்ன சொன்னார் தெரியுமா?...

விஜய் நடித்த தி கோட் படம் டிரெய்லர் பார்த்த நடிகர் அஜீத்குமார், என்ன சொன்னார் தெரியுமா? இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன தகவல் – என்னது, ஏகே அப்படியா சொன்னாரு?

- Advertisement -

எம்கே தியாகராஜ பாகவதர் – பியு சின்னப்பா தேவர், எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜீத்குமார், தனுஷ் – சிம்பு என தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடிகர்களுக்கான போட்டி என்பது நீடித்து வருகிறது. இது ரசிகர்களுக்குள் ஏற்பட்ட போட்டி என்றாலும், அது பலவிதங்களில் நடிகர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவுகிறது.

அதனால் ரசிகர்களிடம் உள்ள போட்டி மனப்பான்மையை, நடிகர்கள் பெரும்பாலும் கண்டிப்பதும் இல்லை. அதை தவிர்க்க வலியுறுத்துவதும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று வெளியில் காட்டிக் கொண்டாலும் சினிமாவில் ரசிகர்களை தூண்டிவிடும் விதமான காட்சிகளை, வசனங்களை வைத்து ரசிகர்களை உசுப்பேற்றி விடுகின்றனர். இதனால் அடிக்கடி ரசிகர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையால், அந்த படங்களுக்கு நல்ல பிரமோ கிடைக்கிறது.

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களிடையே போட்டி இருந்தது. ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்தது. அதே போல் இப்போது விஜய் அஜீத்குமார் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். ஒரு தரப்பு, மற்றொரு தரப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர். இது அவர்கள் நடித்த படங்களுக்கு நல்ல விளம்பரத்தை தேடித் தருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான சில நிமிடங்களில் மில்லியன் அளவுக்கு இது பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் தி கோட் படத்தை இயக்கிய வெங்கட்பிரபு நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர். இது அஜீத்குமாரின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

நேற்று தி கோட் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது, இந்த டிரெய்லரை நடிகர் அஜீத்குமார் பார்த்திருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், தி கோட் டிரெய்லரை அஜீத்குமார் பார்த்துவிட்டு, டேய் சூப்பரா இருக்குடா, விஜய்க்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் சொல்லிடு என்று எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்