- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு பப்ளிசிடி வேண்டாம்… நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை - அவங்க கஷ்டப்படறாங்க… அதை...

எனக்கு பப்ளிசிடி வேண்டாம்… நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை – அவங்க கஷ்டப்படறாங்க… அதை பாருங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜீத்குமார் இருந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாடுகளில் தொடர்ந்து நடந்து வரும் கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் ஆர்வமாக கலந்து கொண்டிருக்கிறார். அஜீத்குமார் கார் ரேசிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் இறுதி வரை இந்த கார் பந்தயங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

- Advertisement -

இப்போது கார் பந்தயங்கள் துவங்கி 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 2 மாதங்கள் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்கும் நடிகர் அஜீத்குமார் அதன் பிறகுதான் நவம்பரில் சென்னை திரும்புகிறார். தொடர்ந்து தனது 64வது படத்தில் நடிக்க அஜித்குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை குட்பேட் அக்லி படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்கிறார். ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜெர்மனியில் நடந்து வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள். என்னை பிரபலப்படுத்த வேண்டாம். இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள்.

- Advertisement -

இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக மனம் ரீதியாக நிறைய கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒரு நாள் இந்திய வீரர்களும் ஃபார்முலா 1 கார் ரேஸில் சாம்பியன் ஆவார்கள் என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

வழக்கமாக நட்சத்திர நடிகர்கள் தங்களை இமேஜை மார்க்கெட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவே பப்ளிசிடி தேடிக் கொள்ளவே விரும்புவார்கள். ஆனால் நடிகர் அஜீத்குமாரை பொறுத்தவரை நடிப்பைக் காட்டிலும் கார் ரேஸை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள், கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள் என்று அவர் கூறியிருப்பது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தல தல தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்