கடந்த 1999ம் ஆண்டில் டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிஷா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மும்தாஜ். தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பட்ஜெட் பத்மநாபன் படத்தில், ஓமணக்குட்டி கேரக்டரில் நடித்த மும்தாஜை, மலையாள சேட்டனாக, பெண் கேட்டு விவேக் வரும் காமெடி காட்சிகள், அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய காமெடியாக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. குஷி படத்தில், விஜயுடன் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு, தன் கவர்ச்சி நடிப்புக்கு அவரே பிள்ளையார் சுழி போட்டார்.
அதன்பிறகு மும்தாஜ் நடித்த பல படங்களில் அவருக்கு கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு நடிக்கும் கிளாமர் ரோல்களே அமைந்தன. அழகும், நடிப்பு திறமை இருந்தும், அவர் கிளாமர் நடிகையாக மாற்றப்பட்டார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை இழக்க கூடாது என்பதற்காக பல படங்களில் மும்தாஜ் அதிக கவர்ச்சியான காட்சிகளில் நடித்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் சார்ந்த படங்களிலும் மும்தாஜ் நடித்தாலும் பெரும்பாலும் படங்களில் அவருக்கு கவர்ச்சி ரோல்களே அமைந்ததால், முன்னணி நடிகையாக வர முடியாமல் குத்தாட்ட நடிகையாக மட்டுமே அவரால் சினிமாவில் நீடித்திருக்க முடிந்தது. சாக்லேட் படத்தில் இடம்பெற்ற மல மல பாடல், அவரது கவர்ச்சிக்கு உச்சமாக அமைந்தது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகை மும்தாஜை காண முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது, நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு குர் ஆன் பற்றி நன்றாகத் தெரியும். அல்லா சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என கட்டளையிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமல் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் புரிய ஆரம்பித்த போது எனக்குள் ஒரு மாற்றம் துவங்கியது. அதனால்தான் நான் இனி சினிமாவில் இருக்க மாட்டேன் என்று ஒரு முடிவை எடுத்தேன் என்று கூறியிருக்கிறார். கவர்ச்சியாக நடிக்க நிறைய பேரு வந்துட்டாங்க. நம்ம சரக்கு போணி ஆகல, அப்படீன்னு ஓபனா சொல்லுங்க மேடம் என்று, நெட்டிசன்கள் பலரும் மும்தாஜை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.





