தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் இப்போது நடித்து வருகிறார். நேற்று முன் தினம் தளபதி 69 படத்தின் படபூஜை நடந்த நிலையில், பையனூரில் நேற்று முதல் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படத்தை எச். வினோத் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக, பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன், வில்லன் கேரக்டரில் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கே வி என் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு விஜய் சம்பளம் 275 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன் கடந்த மாதம் 5ம் தேதி வெளியான விஜய் நடித்த தி கோட் படம், 25 நாட்களில் 460 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில் திரிஷா ஒரு மட்ட பாடல் காட்சியில் நடித்திருந்தார். மட்ட பாடல் காட்சியில் திரிஷா பங்கேற்று குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது.
மட்ட பாடல் காட்சியில் முதலில் நடனமாட, இயக்குனர் வெங்கட் பிரபு அணுகியது தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலாவைதான். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான அவர், நடிகர் விஜயுடன் பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைத்தபோது மறுத்துவிட்டார். ஸ்ரீ லீலா தமிழில் இன்னும் அறிமுகமாகவில்லை. அதனால் நடிகர் விஜயுடன் ஒரு பாட்டுக்கு ஆட அவர் மறுத்துவிட்டதாக தெரிய வந்தது. அதன்பிறகுதான் நடிகை திரிஷாவை அந்த பாடலுக்கு ஆட வைத்தார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ லீலா தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யா ஏற்கனவே நடிக்க மறுத்த புறநானூறு என்ற படத்தின் கதையை, வேறு புதிய டைட்டிலில் இயக்க சுதா கொங்காரா திட்டமிட்டுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இதற்கிடையே இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் வளரும் நடிகையாக, பிரபலமாகி வருகிற ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். அவருக்கான கால்ஷீட் மற்றும் சம்பள விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயுடன் நடனமான மறுத்த நடிகை ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





