நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் அஜித்குமார் வங்கி கொள்ளையர் கேரக்டரில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. தொடர்ந்து அவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
விடாமுயற்சி படப்பிடிப்பு, குட்பேட் அக்லி படப்பிடிப்பு இரண்டு ஐதராபாத்தில் நடப்பதால் பகலில் விடாமுயற்சி, இரவில் குட்பேட் அக்லி என இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று அஜீத்குமார் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இது ஏகே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதுமே ஒரு படத்தில் நடித்தால், அந்த படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிப்பதுதான் அஜித்குமாரின் வழக்கம். ஆனால் இந்த முறை அந்த பழக்கத்தையே மாற்றிவிட்டு, இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பதும், அதுவும் பகலில் ஒரு படம், இரவில் ஒரு படம் என அஜீத் நடிப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்துள்ள நிலையில், திரிஷாவுடன் அஜீத்குமார் நடிக்கும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஏகப்பட்ட வீண் செலவை விடாமுயற்சி படத்தால் சந்தித்துள்ள லைகா நிறுவனம், இந்த பாடல் காட்சியை எடுக்க சொல்லுமா, நிராகரிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ரஷ் காப்பியை, சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் பார்த்திருக்கிறார். படத்தின் இயக்குனர் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர், படத்தை அஜீத்குமாருக்கு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த அஜீத்குமார் மிகவும் மகிழ்ந்து போய், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.
படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது. என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டது என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். படத்தின் நாயகனே இப்படி ஒரு பாராட்டு விமர்சனத்தை கூறி விட்டதால் டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். ஏகே இப்படி பாராட்டும் போது. அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து விடுவர் என்ற சந்தோஷத்தில் படக்குழுவினர் காணப்படுகின்றனர்.





