நடிகர் அஜித் குமாருக்கு கடந்த ஆண்டு துணிவு திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. இதன் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டாலும், அதற்காக மிகப்பெரிய இடைவெளியை அவர் எடுத்துக் கொண்டார். துணிவு திரைப்படம் பொங்கலன்று ரிலீஸ் ஆன நிலையில், கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து அக்டோபர் மாதத்திலேயே விடாமுயற்சி படத்திற்கான சூட்டிங்கிற்க்கு புறப்பட்டார் அஜித்குமார்.
இந்த இடைவேளையில், பைக்கை எடுத்துக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வந்தார். ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதன்பிறகு, பைக் டூர் சம்பந்தப்பட்ட ஒரு சுற்று பயணத்தையும் அவர் அறிவித்தார்.
இப்படி இருக்க விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருப்பது ஞாபகத்திற்கு வந்து, அஜர்பைஜான் நாட்டிற்கு படப்பிடிப்பிற்காக அவர் கிளம்பினார். அக்டோபர் மாதத்தில் இருந்து அங்கு தொடர்ந்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கம் இந்த திரைப்படத்தில், திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதில் படப்பிடிப்பின் போது கலை இயக்குநர் மரணமடைந்தார். இதனால் சில நாட்கள் சூட்டிங் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கியது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவாளராக செயல்பட்ட நீரவ் ஷா, திடீரென இந்தியாவிற்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து ஓம் பிரகாஷை படத்தில் ஒலிப்பதிவாளராக படக் குழுவினர் நியமித்தனர். இந்த திரைப்படம் க்ரைம் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் படப்பிடிப்பின் போது, முக்கிய நட்சத்திரங்களை அஜித் புகைப்படம் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இது போக சூட்டிங் முடித்துவிட்டு, அஜித் அர்ஜுன் ஆரவ் ஆகியோர் ஹோட்டலில் உணவருந்திய புகைப்படமும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறைக்காக, விடாமுயற்சி சூட்டிங் இருக்கு முழுக்கு போட்டுவிட்டு துபாய் நாட்டிற்கு பறந்திருக்கிறார் அஜித்குமார்.
#AK Latest at Dubai ( Family Trip)#AjithKumar#VidaaMuyarchi
— Prakash Mahadevan (@PrakashMahadev) January 2, 2024
அங்கு இரவு நேரத்தில் சொகுசு கப்பலில் தனது குடும்பத்தினருடன் அவர் பயணிக்கும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தல என்று அஜித் அழைக்க, அதற்கு அஜித்குமார் திருப்பி கையை உயர்த்தி காட்டுகிறார். இதனிடையே விஜயகாந்த் மரணத்திற்கு நேரில் கூட அஞ்சலி செலுத்தாமல் அஜித் இருந்ததாகவும், புத்தாண்டு விடுமுறைக்காக துபாய் சென்றிருக்கும் அவர் ஒருமுறை இங்கு வந்திருக்கலாமே என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





