தமிழ் சினிமாவில் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்த நிறுவனம் லைகா புரடக்சன்ஸ், சிங்கப்பூரை சேர்ந்த சுபாஸ்கரன், இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து, தமிழில் பல முக்கிய படங்களை தயாரித்தார். தமிழில் பல நூறு கோடிகளை முதலீடு செய்யும் முக்கிய கார்பரேட் நிறுவனமாக லைகா புரடக்சன்ஸ் இருந்தது.
ஆனால் நல்ல தயாரிப்பாளர் கிடைத்த நிலையில், தொடர்ந்து அவருக்கு வெற்றிப் படங்களை கொடுத்து மிகப்பெரிய அளவில் ஜெயிக்க விடாமல், தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து சில இயக்குனர்கள், அவரை திக்குமுக்காட செய்துவிட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் தொடர் நஷ்டம் காரணமாக, லைகா புரடக்சன்ஸ் இனி சினிமா தயாரிப்பில் ஈடுபடாது என்ற முக்கிய முடிவுக்கு சுபாஸ்கரன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்பவர், முதுகு எலும்பை போன்றவர். நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்கும்போது, ஒரு இயக்குனர் தான் விரும்பிய வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு தர முடியும். ஆனால் தயாரிப்பாளர் கிடைக்காத பட்சத்தில், இயக்குனர் எப்படிப்பட்ட கதையாக, படமாக இருந்தாலும், அதை உருவாக்கி தர முடியாது.
அந்த வகையில் ஒரு நல்ல தயாரிப்பாளரை இழக்கும் சூழ்நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக, 5 இயக்குனர்கள் இயக்கிய 5 படங்கள்தான் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தந்த பலத்த நஷ்டம் காரணமாகவே தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இனி புதிய படங்களை தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2, செக்கச்சிவந்த வானம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, பி வாசு இயக்கிய சந்திரமுகி 2, சுந்தர் சி இயக்கிய வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. ரஜினி, கமல், சிலம்பரசன், கார்த்தி, ராகவா லாரன்ஸ் என பெரிய நடிகர்கள் நடித்த இந்த படங்கள் பயங்கர பிளாப் படங்களாக போய்விட்டன.
இப்படி மணிரத்னம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுந்தர் சி, ஷங்கர், பி வாசு என்ற 5 இயக்குனர்களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், சுந்தர் சி, பி வாசு போன்றவர்களே சொதப்பிய காரணத்தால், பெரிய நஷ்டங்களை தொடர்ந்து சந்தித்த லைகா புரடக்சன்ஸ், இனியும் படங்கள் தயாரித்தால் ஆணிவேரே ஆட்டம் கண்டுவிடும் என்ற அசத்தில், தமிழ் படங்கள் தயாரிப்பு என்ற விஷயத்தில் இருந்து முற்றிலும் விலகிவிடும் முடிவுக்கு வந்துள்ளனர்.





