- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்வளவு கொடூரமாவா காட்சி வைப்பீங்க, இது எவ்வளவு பெரிய வக்கிரம் தெரியுமா?- ஜெயிலர் படத்தை கிழித்து...

இவ்வளவு கொடூரமாவா காட்சி வைப்பீங்க, இது எவ்வளவு பெரிய வக்கிரம் தெரியுமா?- ஜெயிலர் படத்தை கிழித்து தொங்கவிட்ட மூத்த பிரபலம்

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வசூலில் ரூ.500 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த வருடம் வெளியான கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூலை விட அதிகமாகும். இதன் மூலம் தனது போட்டி நடிகரான கமல்ஹாசன் திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளார் ரஜினிகாந்த்.

“ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்திருந்தாலும், ஒரு பக்கம் இத்திரைப்படத்தின் மீது சிலர் கடும் விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள். அதாவது இத்திரைப்படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், ரஜினி திரைப்படத்தில் இது போல் வன்முறை காட்சிகள் இருப்பது சமூகத்தை சீரழிப்பதற்குத்தான் வழிவகுக்கும் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெயிலர் படத்தில் காட்சிகள் அனைத்துமே கொடூரமாக இருக்கிறது. ஒரு காட்சியில் வில்லன் ஒருவரின் தலையை உடைத்து உள்ளே கைவிட்டு மூளையை குடைவார், இது எவ்வளவு பெரிய வக்கிரம்?” என்று கண்டித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “சமூகத்தில் நடக்கும் விஷயங்களைத்தான் படமாக எடுக்கிறார்கள் என்று கூறினாலுமே இது சமூகத்தை மேலும் மோசமாகத்தான் ஆக்கும். சமூகத்தில் இருக்கும் ஒருவர் இந்த படத்தை பார்த்து திருந்தினேன் என கூறினால் பரவாயில்லை, ஆனால் தப்பு செய்து போலீஸில் மாட்டிவிட்டு இந்த படத்தை பார்த்துத்தான் அவ்வாறு செய்தேன் என கூறிய கதைகள்தான் அதிகம் இருக்கிறது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்