- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை நடித்த 5 படங்களில் 4 படங்கள் பிளாப், ஒரே ஒரு படம் மட்டும் பிளாக்பஸ்டர்...

இதுவரை நடித்த 5 படங்களில் 4 படங்கள் பிளாப், ஒரே ஒரு படம் மட்டும் பிளாக்பஸ்டர் ஹிட் – தந்தையை கட்டியணைத்து அழுத இளம் கதாநாயகன்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் குபேரா கூலி உள்ளிட்ட படங்களில் நாகார்ஜூனா நடித்திருக்கிறார்.

நடிகர் நாகர்ஜூனாவின் மனைவி நடிகை அமலா. இவர் தமிழில் பல படங்களில் நடித்தவர். குறிப்பாக மெல்லத் திறந்தது கதவு வெற்றி விழா மாப்பிள்ளை சத்யா ஜீவா என பல படங்களில் நடித்தவர். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துக்கொண்ட பிறகு அவர் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

நடிகர் நாகர்ஜூனா தெலுங்கில் இப்போது அவர் தனது 100வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியும் நடிகராக உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் அவர் மொத்தமாக நடித்தது 5 படங்கள் மட்டுமே. இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற படம் கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த ஒரு படம் தவிர்த்து அவர் நடித்த அகில் ஹலோ மிஸ்டர் மஜ்னு ஏஜென்ட் ஆகிய 4 படங்களும் படு தோல்வியை சந்தித்தது. இத்தகைய தொடர் தோல்வியால் திரை வாழ்க்கையே கேள்விக்குறியான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி அன்று அகில் அக்கினேனியின் 6வது படம் லெனின் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து தற்போது ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக உருவெடுத்துள்ளது. இந்த அசாத்திய வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் அகில், தனது தந்தை நாகார்ஜூனாவை நேரில் சந்தித்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது நீண்ட கால போராட்டத்திற்கு பலன் கிடைத்த உணர்ச்சியில் தந்தை நாகார்ஜூனாவின் காலில் விழுந்து அகில் கதறி அழ தொடங்கினார். மகனின் கண்ணீரைக் கண்ட நாகார்ஜூனாவும் அவரை வாரி அணைத்துக் கொண்டு எமோஷனலாக அழுதார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.

சற்று முன்