தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சி நாயகிகளாக நடித்து ரசிக்ரகளின் கனவுக்கன்னியாக இருந்து சென்று விட்டனர். ஆனாலும் ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு கவர்ச்சி கன்னி என்றால் அது சில்க் ஸ்மிதா தான். குறிப்பாக கடந்த 1980 90களில் சில்க் ஸ்மிதாவுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது என்றால் அது மிகையல்ல.
கடந்த 1979ம் ஆண்டில் வண்டிச்சக்கரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆனால் கடந்த 1996ம் ஆண்டில் செப்டம்பர் 23ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அந்த நாளில் சில்க் ஸ்மிதா எங்களுடன் இருந்திருக்க வேண்டியவர் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது, சில்க் ஸ்மிதாவுடன் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் ஒரு நல்ல தோழி. தேர்ட்டி பிக்சர் படம் எடுக்கும் போது என்னை கேட்டிருந்தால் நிறைய தகவல் சொல்லி இருப்பேன். டேவிட் அங்கிள் கிழக்கு வெளுத்தாச்சு இப்படி பல படங்களில் என்னுடன் அவர் இருந்தார்.
கன்னடத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு பாடல் காட்சி நாளை எடுக்கப்பட இருந்தது. நானும் சிவராஜ்குமாரும் நடித்த கன்னட படம். நாளை காலையில் பெங்களூரில் ஷூட்டிங் என்று திட்டமிட்டு இருந்தோம். நான் அந்த படத்தில் வில்லன். அது ஐட்டம் சாங் தான். சில்க் ஸ்மிதா வந்து டான்ஸ் ஆடுவதாக கமிட் ஆகியிருந்தார்.
அதற்காக புரடியூசர் செக் எல்லாம் கொடுத்துட்டார். பிளைட் டிக்கெட்டும் புக் பண்ணிட்டார். நாளைக்கு அந்த பாடல் காட்சியை எடுப்பது என்று முடிவாகி விட்டது. நெய்வேலியில் நான் இருந்தேன். அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு நான் பெங்களூரு போக வேண்டும். அப்போதுதான் எனக்கு அந்த ஷாக் நியூஸ் கிடைச்சது.
நடிகை சில்க் ஸ்மிதா சூசைடு செய்துக்கொண்டார் என்று சொன்னார்கள். தூக்கு மாட்டீட்டாங்க என்று தகவல் வந்தது. அப்புறம் அந்த பாட்டை நிறுத்தி விட்டோம். பிறகு அந்த பாட்டுல அல்போன்சா டான்ஸ் ஆடினாங்க. அந்த படத்துக்கு பேரு ராஜா. நாளைக்கு என்னோடு ஷூட்டிங் இருந்த நிலையில் அவங்க அப்படி ஒரு முடிவுக்கு போயிட்டாங்க என்று நடிகர் ஆனந்தராஜ் அந்த நேர்காணலில் வருத்தமாக கூறியிருக்கிறார்.





