இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. முதல் படமே பெரிய வெற்றியை பெற்ற நிலையில் முறைமாமன் மேட்டுக்குடி அருணாசலம் உனக்காக எல்லாம் உனக்காக கிரி உன்னைத் தேடி என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
ஜானகிராமன் சின்னா கண்ணன் வருவான் தீயா வேலை செய்யணும் குமாரு என ஜனரஞ்சகமாக படங்களை தந்து அசத்தினார். காதல் காமெடி கவர்ச்சி குடும்ப சென்டிமென்ட் ஜானரில் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சுந்தர் சி, அரண்மனை திரில்லர் திகில் ஜானர் படங்களிலும் ரசிகர்களை மிரட்டினார்.
ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் மாறிய சுந்தர் சி தலைநகரம் வீராப்பு குரு சிஷ்யன் இருட்டு முரட்டுக்காளை தீ ஆயுதம் செய்வோம் வாடா முத்தின கத்தரிக்கா போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்து அசத்தினார். அவர் இயக்கிய அரண்மனை படத்திலும் ஹீரோவாக வந்தார். இப்போது மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக களத்தில் போட்டியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நான் ஒரு ஹீரோ கூட படம் பண்ணினேன். அப்போ அவருக்கு மார்க்கெட்டே இல்லை. பெரிய ரிஸ்க் எடுத்து அவர் கூட படம் பண்ணினேன். அந்த படமும் செம ஹிட் ஆயிடுச்சு. அப்புறம் அதே ஹீரோ கூட இரண்டாவது படம் பண்றேன். அப்போ அவருக்கு மார்க்கெட் இருந்தது.
ஆனால் அந்த படத்துல ஒவ்வொரு சீனுக்கும் என்கிட்ட 100 கேள்வி கேட்கிறார். ரொம்ப பந்தா பண்றார். எனக்கு ஒரு கட்டத்தில் கடுப்பாகி, என்னடா இது. சும்மா இருந்தவரை கூப்பிட்டு ஒரு ஹிட் படம் கொடுத்தோம். இன்னைக்கு நம்மகிட்டயே இப்படி பண்றாரே என்று அந்த படத்து மேல் விருப்பமே இல்லாமல் போச்சு என்று இயக்குனர் சுந்தர் சி வருத்தமாக கூறியிருக்கிறார்.
சுந்தர் சி குறிப்பிடும் அந்த ஹீரோ நடிகர் சித்தார்த்தா அல்லது நடிகர் விஷாலா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் அது நடிகர் நவரச நாயகன் கார்த்திக் தான் என்கின்றனர். இன்னும் சிலர் அது சரத்குமாரா இல்லை மாதவனா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை நடிகர் விமல் தானா அது என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.





