நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில், தமிழ் புத்தாண்டுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு ஜரூராக நடத்தப்பட்டு வருகிறது.
பீஸ்ட், வாரிசு படங்கள் சரியாக போகாத நிலையில், லியோ படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வசூலில் ரூ. 540 கோடியை எட்டினாலும், விமர்சன ரீதியாக இந்த படம் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரை திருப்திப்படுத்தவில்லை.
இப்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் விஜய் 68 படத்தை பெரிய அளவில் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற நிலையில் அவர் கண்ணும் கருத்துமாக மிக கவனமாக படத்தை இயக்கி வருகிறார். மதுப்பழக்கம் உள்ள வெங்கட்பிரபு இந்த படத்தின் வெற்றிக்காக, மதுப்பழக்கத்தை தவிர்க்கும் அளவுக்கு போய்விட்டாராம்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்றால், பல ஆண்டுகளுக்கு முன் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த மாசு என்கிற மாசிலாமணி. என்ற படத்தை வெங்கட்பிரபு தான் இயக்கினார். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கேரவனுக்குள் நுழைந்து உபா அருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சூர்யா கண்டித்ததால், அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட வெங்கட்பிரபு, அதன்பிறகு படத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார். ஆனால் மாசு என்கிற மாசிலாமணி சூர்யா படங்களிலேயே மிக மொக்கையான படமாக போய்விட்டது.
அதனால், இப்போது கேரவனுக்குள் போவதையே மறந்துவிட்டு, விஜய் படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி படத்தை வெற்றிப்படமாக உருவாக்கி தரும் லட்சியத்தில் வெங்கட்பிரபு இருக்கிறார். இதுமட்டுமின்றி அஜீத்குமார் விக்னேஷ் சிவனை வேண்டாம் என மறுத்தது போல, விஜயும் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.





