- Advertisement -
நடிகர் அர்ஜூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி பல யூகங்கள் எழுந்தன. அவரது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்து தெரிவிக்க கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது சொந்த முடிவுகளை எடுக்கவும் தனது சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு. அவர் விரும்பினால் தனக்கான நேரத்தில் அவரே பேசுவார். ஆனால் ஒரு தந்தையாக எனது மகள் அவரது குணநலன் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய்யான மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை பார்த்து என்னால் அமைதியாக இருக்க முடியாது. தொடர்ந்து என் மகள் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்திருக்கிறார்.





