தமிழ் சினிமாவில் 1980 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் அர்ஜூன். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். குறிப்பாக சங்கர் குரு படிச்சபுள்ள ஜெண்டில்மேன் முதல்வன் ஜெய்ஹிந்த் சேவகன் குருதிப்புனல் செங்கோட்டை பிரதாப் ரிதம் ஏழுமலை கிரி மருதமலை போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை தந்தவர்.
சமீபகாலமாக நடிகர் அர்ஜூன் அஜீத்குமார் விஜய் போன்றவர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அர்ஜூன் ஜெய்ஹிந்த் பிரதாப் சேவகன் போன்ற படங்களை அவரை இயக்கி தயாரித்தார். இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக உள்ள நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் இன்னும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கூறியதாவது, என்னுடைய படத்துக்கு ஜெய்ஹிந்த் என பெயர் வைத்தேன். ஆனால் அந்த படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு கொடுக்கவில்லை. இது ரொம்பவும் கொடுமையான விஷயமாக அப்போது எனக்கு இருந்தது. ஏன் இதற்கு வரிவிலக்கு இல்லை, இதில் என்ன இருக்கிறது என்று நான் கேட்டேன்.
ஜெய்ஹிந்த் என்பது தமிழ் வார்த்தை கிடையாது என்று கூறிவிட்டனர். என்னது தமிழ் வார்த்தை இல்லையா, நாட்டோட பிரதமர் முதலமைச்சர் எல்லாருமே ஜெய்ஹிந்த் என்றுதான் சொல்கின்றனர். ஜெய்ஹிந்த் என்று சொன்னால் இந்தியாவுக்கே ஜெய் என்று அர்த்தம். சொல்லுங்க நான் யார்கிட்ட இதைப் பத்தி பேசணும் என்றேன். அப்படியே மழுப்பி அந்த விஷயத்தை தள்ளி விட்டுவிட்டனர்.
கடைசி வரை எனக்கு எந்த பதிலும் முறையாக அவர்கள் சொல்லலே. எனக்கு வரிவிலக்கும் தரலே. அதனால் நிறைய நஷ்டம் எனக்கு ஏற்பட்டது. பணம் நஷ்டமானது எனக்கு பெரிசா தெரியலை. ஆனால் நம்ம நாட்டுல ஜெய்ஹிந்த் என்பதுதான் நம்பர் ஒன். அது ஒவ்வொருவருக்கும் தெரிஞ்சது. ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது. மந்திரம் போன்றது அது. அந்த டைட்டில் வெச்சதால் நமக்கு டேக்ஸ் ப்ரீ கொடுக்கலே என்பது பெரிய கொடுமை.
யாராச்சும் சொன்னா நம்புவாங்களா, ஜெய்ஹிந்த் ன்னு படத்துக்கு பேர் வெச்சதால்தான் எனக்கு வரிவிலக்கு கொடுக்கலே அப்படீன்னு. அதுல இருந்த சில சினிமா டைரக்ட்ஸ் கிட்ட கூட நான் கேட்டேன். இப்படி என் படத்துக்கு வரிவிலக்கு தராததற்கு நியாயமான ஒரு காரணம் சொல்லுங்க ஏத்துக்கிறேன் என்றேன். நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா அவங்க ஒத்துக்க மாட்டாங்க என்று கூறினர். கடைசி வரைக்கும் யார் அவங்க ஏன் ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லவே இல்லை என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





