தமிழ் சினிமாவில் பல அற்புதமான திரைக்கலைஞர்கள் இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டுமே அவர்களது திறமையை அறிந்து தங்களது படங்களில் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் அருள்தாஸ் மிக முக்கியமானவர். இவர் ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார்.
நான் மகான் அல்ல பாபநாசம் காலா விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் ரவுடியாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான வணங்கான் படத்தில் டாஸ்மாக் பார் ஓனராக நடித்திருப்பார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனித்துவமான நடிப்பை அழகாக தந்து விடுவார்.
சமீபத்தில் பாட்டல் ராதா பட விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், காதுகள் கூசும்படியாக சில கெட்ட வார்த்தைகளை மேடையில் பகிரங்கமாக பேசினார். இளையராஜா இயக்குனர் பாலா போன்றவர்களை அவன் இவன் என ஒருமையில் குறிப்பிட்டார். இந்த மேடையில் இயக்குனர்கள் வெற்றிமாறன் லிங்குசாமி பா ரஞ்சித் அமீர் போன்றவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மிஷ்கின் இப்படி வரம்பு மீறி பேசியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா துறை சார்ந்தவர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை, அருவறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அருள்தாஸ், மிஷ்கினின் இந்த தகாத பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகப் படங்களை பார்த்திருக்கேன்னு சொல்றீங்க, உலகம் முழுக்க இருக்கும் புத்தகங்களை படிச்சிருக்கேன்வு சொல்றீங்க என்ன அறிவு இருக்கு உங்களுக்கு, குறைந்தபட்சம் நாகரிகம் வேண்டாமா. ஒரு மேடையில் பேசுகிற பேச்சா இது, எல்லோருக்கும் பெண் குழந்தை இருக்கு. மேடை நாகரீகம் என்பது முக்கியம். எல்லோரையும் சகட்டுமேனிக்கு வாடா என்கிறார், போடா என்கிறார். தொடர்ந்து பல மேடைகளில் இப்படித்தான் மிஷ்கின் பேசி வருகிறார்.
இயக்குனர் பாலாவை அவன் இவன் என்கிறார். இளையராஜாவை அவன் என்கிறார். யாருடா நீ… என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா, நீ ஒரு போலி அறிவாளி. உலக சினிமாவை காப்பியடித்து படம் பண்ணி ஜெயிச்ச போலி அறிவாளி மிஷ்கின் என்று நடிகர் அருள்தாஸ் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





