கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பிறகு லவ் டுடே படத்தில் அவரே நாயகனாக நடித்து படத்தை டைரக்ட் செய்திருந்தார். இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. ரூ. 100 கோடி வசூலை வாரி குவித்தது.
இதையடுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படம், கடந்த 21ம் தேதி வெளியானது. கல்லூரி மாணவர் கேரக்டரில் இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கௌதம் மேனன் மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
கோமாளி படத்தில் கேமியோ ரோலில் கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டோ டிரைவராக நடித்திருந்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் அவரே நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இயக்குனரும் அவரே தான். இப்போது ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் பெரிய வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிராகன் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது, லவ் டுடே படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க சிலர் தயங்கினார்கள். கோமாளி பட டைரக்டர் என்பது மட்டுமே அப்போது என் அடையாளமாக இருந்தது. நான் லவ்டுடே கதையை சொன்ன போது ஆர்வமாக கேட்டார்கள். கதை சூப்பரா இருக்கு என்று பாராட்டி விட்டு, ஹீரோ யார் என்றார்கள்.
படத்தின் ஹீரோ நான்தான் என்றவுடன், டேட் என்ன சார் சொன்னீங்க என்று கேட்டுவிட்டு மார்ச் மாதமா, டேட் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு, நான் பார்த்துட்டு சொல்லட்டுமா என்பார்கள். இந்த படத்தில் பெர்பாமென்ஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, இதைவிட பெர்பாமென்ஸ் கம்மியா இருக்கிற படங்கள்தான் பண்ணிட்டு இருக்கேன் என்று சிலர் சொன்னார்கள்.
இதுல சிலர், ரொம்பவும் புதுசா இருக்குதே என்று யோசித்தார்கள். ஆனால் இதில் உண்மையாக, இல்லே சார் கொஞ்சம் பெரிய ஹீரோக்களோட படம் பண்ண ஆசைப்படறேன் என்று வெளிப்படையாக சொன்னார்கள். அவர்களுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்படி இருந்த எனக்கு டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன்தான் கதாநாயகி என்று இயக்குனர் சொன்ன போது மிகவும் சந்தோஷமாக இருந்தது, என்று பிரதீப் ரங்கநாதன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





