- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அடிக்கடி விரும்பி பார்க்கற படம் அதுதான், அந்த மாதிரி படம் எல்லாம் இப்ப வரலையேன்னு...

நான் அடிக்கடி விரும்பி பார்க்கற படம் அதுதான், அந்த மாதிரி படம் எல்லாம் இப்ப வரலையேன்னு ஏக்கமா இருக்குது – ஆதங்கப்பட்ட நடிகர் அருண்விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் விஜயகுமார். 3 தலைமுறைகள் கண்ட நடிகர். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கும் மிகவும் மூத்த கலைஞர். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் தனது நடிப்பில் முத்திரை பதிப்பவர்.

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு. 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இதில் முதல் மனைவிக்கு 2 மகள்கள் ஒரு மகன். 2வது மனைவிக்கு 3 மகள்கள். விஜயகுமார் – முத்துக்கண்ணு தம்பதி மகன்தான் அருண்குமார். வனிதா ப்ரீத்தா ஸ்ரீதேவி ஆகியோர் மஞ்சுளாவின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரியம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண் விஜய். பாண்டவர் பூமி தடம் குற்றம் 23 என்னை அறிந்தால் மிஷன் சேப்டர் 1 செக்கச் சிவந்த வானம் தடையற தாக்க சினம் கண்ணால் பேசவா மாஞ்சா வேலு உள்ளிட்ட பல படங்களில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

ஆனால் பல வெற்றிப் படங்களில் நடித்தும் அருண் விஜய் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால் சிறந்த நடிகராக தன்னை பல படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். வரும் 10ம் தேதி பாலா இயக்கத்தில் வெளியாகும் வணங்கான் படம், அருண் விஜய் சினிமா பயணத்தில் திருப்புமுனை படமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் அருண் விஜய் பங்கேற்றார். அப்போது நீங்கள் ப்ரீயாக இருக்கும் போது, புதுப்படம் பார்க்க மைண்ட் இல்லை. ஏதாவது பழைய படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தால் எந்த படம் பார்ப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகர் அருண் விஜய், நான் அப்படி அடிக்கடி விரும்பி பார்க்கிற படம் மைக்கேல் மதன காமராஜன். ரொம்பவும் காமெடியா இருக்கும். அந்த படத்துல ஒவ்வொரு கேரக்டர்லேயும் வேரியேசன் தந்து கமல் சார் நடிப்பு சான்ஸே இல்லை. ஒரு நடிகராக, ஒரு பொழுதுபோக்கு படமாக அதை விரும்பி பார்ப்பேன். இந்த மாதிரி படங்கள் இப்போது ஏன் வருவதில்லை என்பது குறையாக இருக்கிறது. அதே போல் நாயகன் படமும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்