தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில், திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனதால், உற்சாகமடைந்த படக்குழுவினர் இதற்கான வெற்றி விழாவை கொண்டாடினர். படத்தின் இரண்டாம் பாதியில் சுமாராக இருந்ததாகவும், பிளாஷ்பேக் காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை என்றும் ரசிகர்கள் கூறினர். அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட லோகேஷ் கனகராஜ், அந்த காட்சிகள் அனைத்தும் பொய் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, வெங்கட் பிரபு உடனான அடுத்த படத்தில் தளபதி விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இந்த திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதில் வில்லனாக மைக் மோகன் வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடிப்பதால் கதாபாத்திரம் குறித்து எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. தளபதி 68-வது திரைப்படமாக உருவாகும் இதனை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரங்களின் நடிப்பது நம் அனைவரும் தெரிந்ததே. இதன் சூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.
அங்கு முக்கியமான சண்டைக்காட்சியை படக்குழு எடுத்துள்ளதாம். தற்போது சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பி இருக்கிறார். அடுத்ததாக பிரசாந்த் ஸ்டூடியோவில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சி எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய தகவலாக, ஹாலிவுட் திரைப்படமான லூபர் படத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த திரைப்படம் எதிர்காலத்தில் பயணிப்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இந்த கான்செப்ட் தான் தற்போது வெங்கட் பிரபு கையில் பிடித்திருக்கிறாராம். அதிலும் விஜயின் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ரோல் என்றும் பேசப்படுகிறது. ஏற்கனவே லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் திரைப்படத்தின் தாக்கமாக எடுக்கப்பட்டது. தற்போது இந்த திரைப்படமும் அதே பாணியில் ஹாலிவுட் திரைப்படத்தை தொட்டு இருப்பது கோலிவுட்டில் பேசு பொருள் ஆகியுள்ளது.





